உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

2.

செங்கட் சோழன் திருவழுந்தூரில் போர் வென்றது

“பாராளர் இவர்இவர் என்றுஅழுந்தை ஏற்ற

படைமன்னர் உடல் துணியப் பரிமாவுய்த்த

தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்

66

திருநறையூர் மணிமாடம் சேர்மின் களே

-

175

(திருமங்கை, பெரிய திருமொழி, 6ஆம் பத்து)

ன்னார் இன்னார் என்று ப்ரசித்தராயிருக்கிற ராஜாக்கள் ஸபரிகாரராய்க் கொண்டு திருவழுந்தூரிலே வந்து எதிரிட, அவர்களுடல் துணியும்படிக்கீடாக வென்ற செங்கட்சோழன்" என்பது வியாக்கியானம்.

அழுந்தை என்றும் (அகம், 196; 11) அழுந்தூர் என்றும் (அகம், 246; 14) கூறப்படும் திருவழுந்தூர் சோழநாட்டில் இருக்கிறது. செங்கட் சோழனைப் பகைவர் எதிர்த்துத் தோற்ற செய்தி இதில் கூறப்படுகிறது. 3. செங்கட்சோழன் 70 மாடக்கோயில்களைக் கட்டியது

66

'இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு

எழில்மாடம் எழுபது செய்(து) உலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின் களே'

இதில், செங்கட்சோழன் 70 திருக்கோயில்களைக் கட்டிய செய்தி கூறப்படுகிறது.

4.

சோழ அரசர் வெற்றிலை உண்டது

திருமங்கை மன்னன் அருளிய முதல் பத்து மூன்றாந் திரு மொழியில், “முற்ற மூத்துக் கோல்துணையா” என்னும் பாசுரத்துக்கு விரிவுரை கூறும் வியாக்கியான ஆசிரியர் சோழர்கள் வெற்றிலை உண்ணும் முறையைக் கூறுகிறார்.

"சோழர்கள் வெற்றிலை சிலரிடலன்றிக்கே தாங்களே எடுத்திறே தின்பது; 'தலை கவிழ்ந்து வாங்கில் சிலரை வணங்கிற்று' என்னும் துர்மானத்தாலே."

இதனால், சோழ அரசர் பிறர் கொடுக்க வெற்றிலையை வாங்கி உண்பதில்லை என்பதும், தாங்களாகவே எடுத்து உண்ணுவர் என்பதும்,