உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

அஞ்சிறைத்தும்பி என்பது, அழகான வண்ணச் சிறகுகளுடைய பட்டாம்பூச்சிகளுக்குப் பெயர். மலர்கள் அலர்ந்த பூஞ்சோலையிலே அஞ்சிறைத் தும்பிகள் பூக்கள்தோறும் பறந்து சென்று, தேனையுண்டு மகிழ்வது போல, தமிழ் இலக்கியப் பூங்காவிலே நுழைந்து இலக்கியத் தேனைப் பருகி மகிழ்ந்தபோது, இடையிடையே எனக்குக் கிடைத்த சொல் ஆராய்ச்சியாகையால், இச் சிறு நூலுக்கு அஞ்சிறைத்தும்பி என்னும் பெயர் சூட்டப்பட்டது. அன்றியும்,

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ

என்று இறையனார் கூறியதுபோல, ஒரு சார்பாகக் காமம் செப்பாமல், கண்டதைக் கண்டபடியே, உள்ளதை உள்ளபடியே கூறுவதுபற்றி இப்பெயர் சூட்டப்பட்டது.

நூல்களைப் படிக்கும்போது என் மனத்தில் தோன்றிய கருத்துக்களை ஆராய்ந்து அவ்வப்போது எழுதப்பட்டவை இக் கட்டுரைகள்.

தமிழ் இலக்கியம் வளம் மிக்க பெரிய பூஞ்சோலை. அவ்விலக் கியப் பூஞ்சோலையில் புகுந்து ஆராய்ந்து தேடினால், அங்குப் பலப்பல அழகான பொருள்கள் கிடைக்கின்றன. அவ்வாறு கிடைக்கும் பொருள்களில் ஒன்று, சொல்-ஆராய்ச்சி. சொல் ஆராய்ச்சி மிகப் பெரியது. அதில் ஒரு சிறு துணுக்கு இந்த அஞ்சிறைத் தும்பி.

சொற்கள் எவ்வாறெல்லாம் உருமாறுகின்றன என்பதும், எவ்வாறெல்லாம் புதுப்புதுப் பொருள்களைப் பெறுகின்றன என்பதும்

இதில் கூறப்படுகின்றன.

சொற்களைப்பற்றிய ஆராய்ச்சி தேவைப்படுகிறது. இவ்வா ராய்ச்சியினால் பல செய்திகளும், கருத்துக்களும் புலனாகின்றன என்பதை இக் கட்டுரைகளினால் அறியலாம். ஆர்வம் உள்ளவர் சொல் ஆராய்ச்சியில் ஈடுபடுவார்களாக.,