உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

தமிழ் - அகப்பொருள்

181

தமிழ் என்றும் பெயர், சிறப்பாக அகப்பொருள் இலக்கியத்தைச் சுட்டும் மரபு, நெடுங்காலமாக நம்மிடையே இருந்து வருகிறது. தமிழ் என்பதற்குத் தமிழ்மொழி என்றும், இனிமை என்றும், அழகு என்றும் பொருள் உண்டு. இம்மூவகைப் பொதுப் பொருளோடு, தமிழ் என்னும் சொல்லிற்கு அகப்பொருள் என்னும் சிறப்புப்பொருளும் வழங்கி வருகிறது. சங்க காலத்தில் மட்டுமன்றி, பிற்காலத்திலும் அகப்பொருள் செய்யுளுக்குத் தமிழ் என்னும் பெயர் வழங்கியமைக்குத் தமிழ் இலக்கியங்களில் சான்றுகள் பல உள்ளன.

ஆரியவரசன் தமிழ் பயின்ற வரலாறு

கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஆரிய அரசன் பிரகத்தன் (பிருகதத்தன்), தமிழில் அகப்பொருள் செய்யுட் களின் சிறப்பை அறிந்து, அதைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினான். அவன் முதலில் தமிழ் மொழியைப் பயின்றான்; பின்னர் அகப்பொருள் துறையையும் அவன் கற்றான். அவனுக்கு அகப் பொருளைக் கற்பித்தவர், அக்காலத்திய புலவர்களுள் சீர்த்தி மிக்கவரான கபிலர் என்பவராவர். அவ்வரசனுக்கு அகப்பொருளைக் கற்பிப்பதற்காகவே, கபிலர் குறிஞ்சிப்பாட்டை (பெருங்குறிஞ்சியை)ப் பாடினார். அச்செய்யு ளின் அடிக்குறிப்பு, 'ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது’ என்று தெரிவிக்கிறது. இத்தொடர் மொழியில் உள்ள தமிழ் என்னும் சொல் அகப்பொருளையே சுட்டுகிறது. குறிஞ்சிப்பாட்டு, தமிழ் எழுத்திலக்கணத்தையோ சொல்லிலக் கணத்தையோ கூறவில்லை; அகப்பொருள் இலக்கணத் தின் ஒரு துறையை விளக்கும் இலக்கியமாக விளங்குகிறது.1

அகப்பொருளைக் கற்ற பிரகத்தன், தானும் அகப்பொருள் செய்யுட்களைப் பாடினான் எனக் கூறலாம். அவற்றுள் ஒன்று குறுந்தொகையில் 184-ஆம் செய்யுளாக இடம் பெற்றிருக்கிறது அச்செய்யுளின் அடிக்குறிப்பு. 'ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன் பாடியது' என்று கூறுகிறது. அகப்பொருளைக் ‘கந்தருவ முறை என்றும், 'யாழோர் முறை 2 என்றும் கூறுவதுண்டு. யாழோர் முறையைக் கற்றபடியால் - அகப்பொருளைக் கற்றமையால் - இவன் 'யாழ்ப் பிரமதத்தன்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றான் என்று நாம் கருதலாம்.3

3