உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

183

இனி நுதலிய (இறையனார் அகப்பொருள் சொன்ன) பொருள் என்பது, நூற்பொருளைச் சொல்லுத லென்பது. இந்நூல் என்னுதலிற் றோவெனின் தமிழ் நுதலிய தென்பது5

என்னும் பகுதியில், தமிழ் என்னும் சொல், அகப்பொருளையே சுட்டுவதைக் காணலாம். இவ்வுரையின் மற்றோர் இடத்திலும்,

இனி நூல் நுதலியதூஉம் உரைக்கற்பாற்று. அது பாயிரத்துள்ளே உரைத்தாம்; தமிழ் நுதலிய தென்பது

"6

என்னும் குறிப்பு காணப்படுகிறது.

மாணிக்கவாசகர் போற்றிய தமிழ்

கூடல் மாநாகரில் சங்கப் புலவர்கள் ஆய்ந்த தீந்தமிழைக் குறிக்கும் இடத்து, மாணிக்கவாசகப் பெருமான் தமிழ் என்னும் சொல்லை, ‘அகப்பொருள்' என்னும் பொருளில் பயன்படுத்தியுள்ளார்: சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்

உறைவா னுயர்மதிற் கூடலின்

ஆய்ந்தஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனையோ வன்றி

ஏழிசை சூழல் புக்கோ

இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம் புகுந் தெய்தியதே

என்னும் திருக்கோவையார் பாடல் (20), இக்கருத்தை அரண் செய்கிறது.

சீவகன் ஆய்ந்த தென்தமிழ் மெய்ப்பொருள்

இடைக்காலத் தமிழகத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களும், அகப்பொருள்' என்னும் பொருளில், தமிழ் என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். திருத்தக்கதேவர், தம்முடைய காப்பியத்தில், இச்சொல்லை, இப்பொருளில் கையாண்டுள்ளார். பதுமையும் சீவகனும் காதல் கொண்டனர். பிறர் அறியாதவகையில், அவர்கள் களவொழுக்கத்தில் ஈடுபட்டனர். சீவகன், பதுமையைச் சந்திக்கப் பூஞ்சோலைக்குச் சென்றான். இச்செய்தியைச் சொல்லுமிடத்து, 'தமிழ்' என்னும் சொல்லை,