உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லாடனார்

பரணர் கபிலர்களுக்குப் பிறகு இருந்தவர் கல்லாடனார். இவரும் இவருடைய குடும்பத்தினரும் வேங்கடமலைக்கு அப்பால் வேங்கடநாட்டில் இருந்தவர்கள் என்பது இவருடைய செய்யுளினால் அறிகிறோம். பொறையாற்றுக்கிழான் என்னும் குறுநில மன்னனைப் பாடிய இப்புலவர், தமது ஊரில் வற்கடம் நேர்ந்து பசி கூர்ந்த படியினால் தமது சுற்றத்துடன் தெற்கே வந்ததாகக் கூறுகிறார்.

“வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென ஈங்குவந் திறந்தவென் இரும்பேரொக்கல்

-

என்று (புறம்.391:7-8) இவர் கூறுகிறார்.

இவர் தமது செய்யுட்களில் வேங்கடநாட்டையாண்ட புல்லி என்னும் அரசனைக் கூறுகிறார். புல்லியினுடைய வீரர்கள் காட்டி லிருந்து யானைக் கன்றுகளைப் பிடித்து வந்து தங்கள் ஊர்க் கள்ளுக்கடையில் கொடுத்து அதற்கு விலையாகக் கள்ளைக் குடித்து மகிழ்ந்த செய்தியைக் கூறுகிறார்:

‘வலஞ்சுரி மராஅத்துக் சுரங்கமழ் புதுவீச் சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக் கறையடி, மடப்பிடி கானத் தலறக்

கவிற்றுக்கன் றொழித்த உவகையர் கலிசிறந்து

கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து பெரும்பொழி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி

நெடுங்கொடி அடங்கு நியம மூதூர்

கறவுகொடை நல்லிற் புதவுமுதற் பினிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி

வியன்தலை நன்னாட்டு வேங்கடம்.

- (அகம். 83:1-10)

பொருள் சேர்ப்பதற்காக வெளிநாடு சென்ற ஒருவன் வேங்கட மலையைக் கடந்து அதற்கு அப்பால் உள்ள நாட்டுக்குச் சென்றதைக் கூறுகிறார். அவ்வாறு கூறுகிறவர் புல்லியையும் கூறுகிறார்.

கல்வி, சனவரி 1967. மலர் 3