உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கண்ட பெருந்தமிழன்*

தமிழறிஞர் உலகத்திலே, பல்லாவரம் என்றால் மறைமலை அடிகள் என்றும், மறைமலை அடிகள் என்றால் பல்லாவரம் என்றும் எண்ணம் உண்டாவது மரபு. பல்லாவரத்திற்குச் சென்று மறைமலை அடிகளைக் கண்டு அவருடன் அளவளாவித் திரும்பி வரும்போது, ஒரு புனிதமான இடத்திற்கு யாத்திரை சென்று வழிபட்டு மன அமைதியோடு திரும்பி வருவது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்படுவது உண்டு. இதன் காரணம் யாது? சமயப் பற்றா? அன்று. சாத்திரப் பற்றா? அதுவும் அன்று. பின்னை என்னை எனின், அப்பெரியாரிடத்தில், அவரது பேச்சிலும் எழுத்திலும் காணப் பட்ட தூய தனித்தமிழ்! கலப்பற்ற நல்ல இனிய தமிழ்! அடிகளார் பேசும் மெல்லிய இனிய அழகிய தமிழைக் கேட்கும் போது, அவரது கலப்பற்ற தூய தமிழைச் செவிமடுக்கும் போது, உள்ளத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் உணர்ச்சியும் பெருகும். நாமும் தனித் தமிழ் பேசவேண்டும் என்னும் ஊக்கம் பிறக்கும். அடிகளார் இயற்றிய நூல்களைப் படிக்குந்தோறும் இவ்வித உணர்ச்சிகளே உண்டாகின்றன. மறைமலையைக் கண்டு அளவளா வியது எனது வாழ்நாட்களில் ஐந்து தடவை மட்டுந்தான். (அடிகளார் சொற்பொழிவுகளைப் பலமுறை கேட்டு அவரது “செந்தமிழால் செவி கழுவி "யுள்ளேன்) ஒவ்வொரு தடவையும், அடிகளாரிடம் குடி கொண்டிருந்த தூய தனித்தமிழ், அவரிடம் பெருமதிப்புக் கொள்ளச் செய்தது. அவரைப்பற்றி நினைக்கும்போதெல்லாம், அடிகள் ஒரு பெருந்தமிழன் என்று என் உள்ளம் சொல்லிக் கொண்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், பல்லாவரத்தில், அடிகளார் மாளிகையில், பொதுநிலைக் கழக விழா நடைபெற்றது. அடிகளார் தலைமை தாங்கினார்கள். பல பேச்சாளர்களுள் திரு. மறை. திருநாவுக்கரசு அவர்களும் ஒருவர். திருநாவுக்கரசு அவர்கள், தமது சொற்பொழிவில், உரிமையோடு அடிகளாரைப்பற்றிச் சில கூறினார்கள். அவற்றில், “அடிகளார் மிக்க கெர்வமுடையவர்,” என்பதும் ஒன்று. உடனே, தலைமை தாங்கிய அடிகளார் மலர்ந்த முகத்துடன் “கர்வம் *செந்தமிழ்ச்செல்வி, 25,1950.