உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ் வள்ளல்

தமிழ்ச் சமுதாயத்திலே - நாட்டுக் கோட்டை நகரத்தாருக்கு முக்கிய இடம் உண்டு. தொன்றுதொட்டுத் தமக்கென ஒரு நாகரிகமும் பண்பாடும் படைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிற தமிழ்ச் சமுதாயத்திலே அன்றுதொட்டு இன்று வரையும் நாட்டுக் கோட்டை நகரத்தார் ஒரு சிறந்த அங்கமாக இருந்து வருகிறார்கள். இருந்து வருவது மட்டுமல்ல, தொல்காப்பியர் காலம் முதல் இன்றளவும் இந்தச் சமூகத்தார் தமிழர் நாகரிகம் பண்பாடு கலை முதலியவற்றைப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். பழைய பண்பாடுகளைப் போற்றி வருவது நகரத்தார்க்குரிய சிறந்த இயல்பாக இருந்து வருகிறது. இதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். ஆனால் இப்போது அதுபற்றி

ஆராய வேண்டுவதில்லை. நகரத்தாரின் பண்பாடுகளை ஆராய்வதற்கென்றே அமெரிக்காவிலிருந்து ஒருவர் வந்திருப்பதாக எனது நண்பர் திரு. 'சோமலெ' அவர்கள் கூறினார்கள்.

காடுகளிலும் மலைகளிலும் ஒதுங்கி வாழும் மக்களைப் பற்றி ஆராய்ச்சிக்காரர்கள் ஆராய்வது உண்டு. ஆனால், நாகரிகமும் நற் பண்பும் பெற்றுச் செல்வம் படைத்து நல்வாழ்வு வாழ்கிற ஒரு முக்கிய சமுதாயத்தைப் பற்றி ஆராய்வதற்கென்று மேல்நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சிக்காரர் வந்திருக்கிறார் என்றால் அது நகரத்தாரிடம் ஏதோ ஒரு தனிப்பண்பு இருக்கிறது என்பதைக் சுட்டுகிறதல்லவா?

நாட்டுக்கோட்டை நகரத்தார் அந்தந்தக் காலங்களுக்கேற்பவும் சூழ்நிலைகளுக்கேற்பவும் அந்தந்தத் தேவைகளுக்கு ஏற்பவும் தமிழ் நாட்டிலே நல்லறங்களைச் செய்து வந்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றை அறிந்தவர் அறிந்திருக்கிறார்கள். நகரத்துப் பெரியார்கள் காலந்தோறுஞ் செய்துள்ள அறச் செயல்களை எழுதப் புகுந்தால் அது பெரியதோர் விரிவுரையாக நீண்டுவிடும். ஆனதுபற்றி காலஞ் சென்ற கலைவள்ளல், செட்டி நாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தமிழகத்துக்குச் செய்துள்ள கலைத்தொண்டுகளை மட்டும் நினைவு கூர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நகரத்தார் மாநில மாநாட்டு மலர், சென்னை நகரத்தார் சங்க வெளியீடு,

11-7-1965.