உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

27

பாடுகிறது. அப்பாடலின் ஒரு பகுதி, தமிழ் என்னும் சொல்லுக்கு உரை கூறுவது போல அமைந்திருக்கிறது. அப்பகுதி வருமாறு:

அகறல் அறியா அணியிழை நல்லார்

இகறலைக் கொண்டு துனிக்கும் தவறிலர்இத்

தள்ளாப் பொருள் இயல்பில் தண்டமிழ் ஆய்வந்திலார் கொள்ளார்இக் குன்று பயன்

இச்செய்யுளில்

பொருள் இயல்பில் தண்தமிழ் என்று கூறியிருப்பது, அகப்பொருள் இலக்கணம் பற்றிய தமிழ் என்று பொருள் பெறுகிறது. இதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையும் இதனையே கூறுகிறது. அவர் உரை இது:

"பொருளிலக்கணத்தையுடைய தமிழை ஆராயாத தலைவர் களவொழுக்கத்தைக் கொள்ளமாட்டார்... இனி அக்களவிற் புணர்ச்சியை யுடைமையான் வள்ளி சிறந்தவாறும், அத்தமிழை ஆராய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறுகின்றார்.

وو

இதனால், தமிழ் என்பதற்கு அகப்பொருள் (காதல்) என்னும் பொருள் உண்டென்பது தெரிகிறது. முருகன் அகப்பொருள் முறைப்படி வள்ளியைக் காதல்மணம் செய்தான் என்று கூறப்படுகிற இவ்விடத்தில் “பொருளியல்பில் தண்டமிழ்” (அகப்பொருளாகிய தமிழ்) என்று கூறப்படுவது காண்க.

அவிநயனார் என்னும் புலவர், இதனைத் தெளிவாக விளக்கு கிறார். அவரது செய்யுள் இது:

முற்செய் வினையது முறையா உண்மையின்

ஒத்த இருவரும் உள்ளக நெகிழ்ந்து

காட்சி ஐயம் தெரிதல் தேற்றலென

நான்கிறந்து, அவட்கு நாணும் மடனும்

அச்சமும் பயிர்ப்பும், அவற்கு

முயிர்த்தகத் தடக்கிய

அறிவும் நிறைவும் ஓர்ப்பும் தேற்றமும்

மறைய, அவர்க்கு மாண்டதோ ரிடத்தின்

மெய்யுறு வகையு முள்ளல்லதுடம் புறப்படாத்

தமிழியல் வழக்கமெனத்

தன்னன்பு மிகை பெருகிய

களவெனப் படுவது கந்தருவ மணமே1