உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

31

என்னும் குணமாலையார் இலம்பகச் செய்யுளில், வானத்திலே விளங்கும் சூரியன், தென்பக்கமிருந்து வடக்குப்பக்கம் சென்றதைக் (அயனத்தைக்) கூறுகிற இடத்தில், கடவுளர் (முனிவர்) மனம் போலத் தூய்மையான வானம் என்று கூறப்படுகிறது. இதில் முனிவர்கள் கடவுளர் என்று கூறப்பட்டிருப்பது காண்க.

சீவக சிந்தாமணி (முத்தியிலம்பகம்,

மணியருபதம்)

செய்யுளிலும், துறவு பூண்ட முனிவர் கடவுள் என்று கூறப்படுகிறார்:

சுறவுக்கொடிக் கடவுளொடு காலற்றொலைத் தோய், எம்

பிறவியறு கென்று பிற சிந்தை இலராகி

நறவமலர் வேய்ந்து நறுஞ்சாந்து நிலமெழுகித் துறவுநெறிக் கடவுளடி தூபமொடு தொழுதார்

சீவக மன்னன் அரசு துறந்து, துறவு பூண்டு கேவல ஞானம் பெற்று வீடுபேறடையும் நிலையில் இருந்தபோது, விஞ்சையர் வந்து அவரைத் தொழுது வணங்கியதை இச்செய்யுள் கூறுகிறது. இங்குத் துறவியாகிய சீவக முனிவர் கடவுள் என்று கூறப்பட்டது காண்க.

திருக்கலம்பகம் என்னும் நூலிலும், இச்சொல் இந்தப் பொருளில் வழங்கப்பட்டுள்ளது:

தருமத் திகிரிப் படையிற் புவனத் திரயந்தனை யாள்வாய்

கருமக் கடலைச் சுவறக் கடையும் கடவுட் கணநாதா

என்பது அச்செய்யுள் அடி.

"தருமச் சக்கரத்தினாலே மூன்று உலகத்தையும் ஆள்பவனே! னையாகிய கடலை வற்றக் கடைகின்ற முனி கணங்களுக்கு நாயகனே!” என்பது இதன் பொருள். இச்செய்யுளில் முனிவர் கூட்டம் கடவுள் கணம் என்று கூறப்பட்டிருப்பதை நோக்குக.

குறுந்தொகை என்னும் நூலில், 203-ஆம் பாட்டிலும், துறவி, கடவுள் என்று கூறப்படுகிறார்.

கடவுள் நண்ணிய பாலோர் போல

ஒரீஇ ஒழுகும்

என்பது அச்செய்யுள் அடி. முற்றத் துறந்த முனிவர்களைக் கண்ட காலத்து, தூய்மையற்றோர், தாம் தூய்மையற்றவராக இருப்பதனாலே