உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

சோலை,

மலர்வேய்ந்த மான்பிணை யன்னார் பலர்நீ கடவுண்மைக் கொண்டொழுகு வார்;

அவருள்,

எக்கடவுள் மற்றக் கடவுளைச் செப்பீமன்

33

என்று கேட்கிறாள். அதாவது, "நீர் கடவுளாக (முனிவராக)க் கொண்டவர், மான்போலுங் கண்ணை யுடையவர்களாய்த் தலையிலே மலர் சூடியவர்கள் (மகளிர்). அந்தக் கடவுளர்களில் நீர் தங்கியிருந்த கடவுள் யார், சொல்லும்” என்று கேட்கிறாள். அதற்குத் தலைமகன்,

முத்தேர் முறுவலாய்! நாமணம் புக்கக்கால்

இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய அக்கடவுள் மற்றக் கடவுள்

என்று கூறுகிறான்.“பின்னை அந்தக் கடவுள், முத்தையொக்கும் முறுவலையுடையாய்! நாம் மணத்தைச் செய்ய இப்பொழுது முகுத்த மென்று அம்முகுத்தம் வாய்ப்பச் சொன்ன அந்தக் கடவுள் காண் என்றான்” (நச்சினார்க்கினியர் உரை).

மேலே காட்டிய கலித்தொகைச் செய்யுட்களில், முனிவர்களாகிய துறவிகள் கடவுளர் என்று கூறப்பட்டிருப்பது காண்க.

இளங்கோ அடிகளும் முனிவர்களாகிய துறவிகளைக் கடவுளர் என்று கூறுகிறார்.

ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக் கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்1

என்றும்,

பெண்டிரும் உண்டியும் இன்பமென்று உலகிற் கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம் கண்டன ராகிக் கடவுளர் வரைந்த காமம்?2

என்றும்,

கண்ணகி தாதை கடவுளர் கோலத் தண்ணலம் பெருந்தவத் தாசீவகர் முன் புண்ணிய தானம் புரிந்தறம் கொள்ளவும்3