உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

கருத்தினதே என்று களிநெறியான், அம்ம!

தருக்கினனே சான்றோர் மகன்.

இச்செய்யுள்களில், போர்வீரர் சான்றோர் எனக் கூறப் பட்டிருப்பது

காண்க.

சான்றோன் என்னும் சொல்லுக்கு இக்காலத்தில் வழங்குகிற அறிஞன் என்னும் பொருள் மட்டும் அல்லாமல், வீரன் என்னும் பொருளும் உண்டு என்பதை இதுகாறும் ஆராய்ந்தோம். இனி, இப் பொருளை ஆதாரமாகக் கொண்டு, வேறு மூன்று செய்யுள்களின் உண்மைப் பொருளைக் காண்போம். அவை ஆசாரக் கோவைச் செய்யுளும், புறநானூறு 312-ஆம் செய்யுளும், திருக்குறள் மக்கட்பேறு (புதல்வரைப் பெறுதல்) என்னும் அதிகாரத்தில் உள்ள, “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்” என்னும் செய்யுளும், நாலடியார் செய்யுளும் ஆம். இவற்றை முறையே ஆராய்வோம்.

ஈன்றாள் மகள் உடன்பிறந்தாள் ஆயினும் சான்றோர் தமித்தா உறையற்க ஐம்புலனும் தாங்கற் கரிதாக லான்

என்பது ஆசாரக் கோவைச் செய்யுள்.

இச்செய்யுளில் சான்றோர் என்னும் சொல் வந்துள்ளது. இச்சொல்லுக்கு இவ்விடத்தில் என்ன பொருள் கொள்வது? அறிஞர் என்று பொருள் கொள்வதா? அறிஞன் என்று பொருள் கூறினால், அறிவாளிகள் எல்லோரையும் இழிவுபடுத்தி அவமானப் படுத்துவதாக முடியும். என்னை? “அறிஞர் தாயுடனும், மகளுடனும், உடன் பிறந்த தங்கை தமக்கைகளுடன் தனித்து வசித்தல் கூடாது. ஏனென்றால், அவர்கள் காமத்தை அடக்க முடியாதவர்கள்” என்று பொருள் கூறினால், அறிஞர் உலகத்தைக் காமுகர் என்றும், ஒழுக்கம் இல்லாதவர் என்றும், துன்மார்க்கர் என்றும் கூறி அவர்களை இழிஞர் என்று முடிவு கட்டுவதாகும் அல்லவா? அறிஞர்கள், காமத்தை அடக்க முடியாமல் ஒழுக்கம் தவறி நடப்பவர்களென்றால் அவர்களின் அறிவினால் என்ன பயன்? மிருகங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு என்ன?

இவ்வாறு அறிஞர்களை இழிவுபடுத்துவது ஆசாரக் கோவை ஆசிரியரின் கருத்து அன்று. ஆகவே, இச்செய்யுளில் வந்துள்ள