உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

71

உத்தரகுமாரன் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தபோது, அவன்தான் போரை வென்று ஆனிரைகளை மீட்டான் என்று அவர்கள் நம்பினபடியால்-அவனை எல்லோரும் வரவேற்றுப் புகழ்ந்தார்கள். உத்தரகுமாரன் தன் தந்தையை வணங்கி, அவனுடன் அரண்மனைக்குச் சென்று தன்னுடைய தாயை வணங்கினான். அரசியாகிய சுதேட்டிணை, தன் மகனின் வீரத்தைக் கேள்விப்பட்டிருந்த படியால், அவனைக் கண்ட போது, அவனைப் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிகமாக மகிழ்ச்சி யடைந்தாள் என்று வில்லிபுத்தூரார் கூறுகிறார். அச்செய்யுளைப் படியுங்கள்:

ஆன்றமைந் தடங்கு கேள்வி

அண்ணலும் அவனைப் பெற்ற

தோன்றலும் பின்னர்ச் சென்று

சுதேட்டணை கோயில் எய்த

ஈன்றவப் பொழுதின் ஓகை

எண்மடங் காசு விஞ்சச்

சான்றதன் மகனைக் கண்டு

மகிழ்ந்தனள் தவத்தின் மிக்காள்

இந்தச் செய்யுளிலே வில்லிபுத்தூரார், “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச், சான்றோன் எனக்கேட்ட தாய்” என்னும் குறளின் கருத்தை, அதாவது, சான்றோன் என்பதற்கு வீரன் என்னும் பொருளை அமைத்திருப்பது காண்க. இனி, நாலடியார் செய்யுளைப் பார்ப்போம்.

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை

2

என்பது நாலடியார் செய்யுள். இச்செய்யுளில் வந்துள்ள சான்றவர் என்னும் சொல்லுக்கு இக்காலத்தவர் அறிஞராகிய பெரியோர்கள் என்று பொருள் கூறுகின்றனர். “மாந்தளிர் போன்ற நிறமுடைய இளமங்கையே என்று மாதரை நோக்கிப் பலகாலும் கூறி மனம் உருகும் அறிஞர்கள், அம்மாதரது உடம்பின் இழிவான இயல்பை எண்ணிப் பார்க்கமாட்டார்களோ” என்று உரை கூறுகிறார்கள். இது தவறான உரை. மாதரையே எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பது அறிஞர்