உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

ம்

81

وو

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா இராசராசசோழன் காலம்: “பூண்டி உடையான் உதயஞ் செய்தான் குடுத்த பிடாகை. 'இந்நிலத்துக்குப் பிரதி க்ஷேத்திரமாக நான் குடுத்த நிலமாவது...” “பிரதி க்ஷேத்திரம் நிலம் விட்டுக் குடுத்தோம்.

66

995

தஞ்சை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, சுந்தர பாண்டியதேவர் காலம்: “அந்திப் பிறையான் திருஞானசம்பந்தற்கு நாங்கள் விற்றுக் குடுத்த மனைகளும் நிலங்களுமாவன...தென் சிறகில் விற்றுக் குடுத்த மனைகள் அஞ்சு...இவர்க்கு விற்றுக்குடுத்த நிலம் முப்பதுமாவுக்கு எல்லையாவது...இம்மனை அஞ்சும் விற்றுக் குடுத்தோம்...விலைப் பிரமாணம் பண்ணிக் குடுத்த நிலம்.”6

இராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை தாலுகா சுந்தரபாண்டியன் காலம்: “இறையிலி பிடிபாடுபண்ணிக் குடுத்த பரிசாவது....இறையிலி பிடிபாடு பண்ணிக் குடுத்தோம்."7

குலசேகர தேவர் காலம்: "காலிங்கராயத் தலைக்கோலிக்கு இறையிலி பிடிபாடு பண்ணிக் குடுத்த பரிசாவது... இறையிலி பிடிபாடு பண்ணிக் குடுத்தோம்.”8

செங்கற்பட்டு மாவட்டம், செங்கற்பட்டு தாலுகா: "நாலேகாற் காணம் தண்டமிடவொட்டிக் குடுத்தோம் படுவூர் ஊரோம்... எப்பேற் பட்ட இறையும் இழிச்சி குடுத்தோம். நீர்விலை குடுப்பதானோம் படுவூர் ஊரோம்.”9

செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகா இராசராச சோழன் காலம்: ஆடு தொள்ளாயிரமும் சிலரேலகை செய்து குடுக்கவென்று அருளிச் செய்து...மன்றாடி தாங்கி கம்பன் வசம் குடுத்த ஆடு... கொம்பன் வசம் விளக்கிரண்டிசனுக்குக் குடுத்த ஆடு நூற்றெண்பது... மன்றாடி செருப்பனேறன் வசம் விளக்கிரண்டினுக்குக் குடுத்த டு நூற்றெண்பது... திருவூறல் வசம் விளக்கிரண்டினுக்குக் குடுத்த ஆடு நூற்றெண்பது..மன்றாடிகள் வசம் குடுத்த ஆடு தொள்ளாயிரத்தால்..."

சித்தூர் மாவட்டம், காளாஸ்தி தாலுகா சக ஆண்டு 1450 (கி.பி. 1528: “நட்டுவக்காணி காளத்திநாதன் மகள் நாச்சியாற்கு தர்மசாசனம் பண்ணிக் குடுத்த படி... தமக்கு புண்ணியமாகி குடுத்த பணம் நூறு.

9911