உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

அடைக்கா யமுதுக் காறுமி யத்தும்

அந்தண னொருவன் அபிஷேகஞ் செய்யத் தந்தன குறுணி முற்றதைந்த நாழியும்

மறை யேவல்செய் மாணிரண் டினுக்கு குறைவறக் குடுத்த நெற்குறுணி நாழியும்17

தென் ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள கல்லெழுத்துச் சாசனச் செய்யுள். முதலாங் குலோத்துங்க சோழனின் சேனைத் தலைவனான நரலோக வீரனைப் பற்றிய 38 செய்யுள்களில் ஒன்று இச்செய்யுள்.

என்றும் பெறுதலால் எருவிழிற் புலியூர்

மன்றில் நடனுக்கு மாமதக் குன்று குடுத்தருளி மண்ணிற் கொடுங்கலி வாராமே தடுத்தான் தொண்டையர் கோன் றான்18

வட ஆர்க்காடு மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா, திருவண்ணா மலை சிவன் கோவிலில் உள்ள சாசனக் கவி. மகதைப் பெருமாளின் வெற்றிச் சிறப்பைக் கூறும் செய்யுள்களில் ஒன்று இது.

எண்மேல் மிகும்பரித்தேர் மகதேசன் இகல்விசையப் பெண்மேல் விரும்பிவெம் போர்செய்தநாள் பின்குடாவடுகர் விண்மேல் நடந்து வடுகென்னும் நாமம் விலக்குண்டபின் மண்மேல் நடந்ததுதேசி முன்னாள் வடுகொன்றுமே19

இந்தச் சாசனச் செய்யுள்களிலும் குடு என்னும் சொல் வழங்கப் பட்டுள்ளதும், கொடு என்னும் சொல் வழங்கப் படாமலிருப்பதும் கருதத்தக்கன.

இதனால், குடு என்னும் சொல்லே சரியான இலக்கியச் சொல் என்பதும், குடு என்னும் சொல் திரிந்து பிற்காலத்தில் கொடு என்று வழங்கப்பட்டதென்பதும் வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றன. ஆனால், கொடு என்கிற பிற்காலத்து வழக்குச் சொல்லே திருத்தமான பழைய வழக்கென்றும், கொடு என்பதன் சிதைவே குடு என்றாயிற்று என்றும் இக்காலத்தவர் கருதும்படியும் ஆகிவிட்டது.

அப்படியானால், பழைய இலக்கியச் செய்யுள் நூல்களில் குடு என்னும் சொல் காணப்படாமல் கொடு என்னும் சொல் காணப் படுவதேன் என்று கேட்கலாம். அதற்கு விடை மேலே கூறியதே.