உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் ஆற்றி

விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்.

என்று கூறுவது காண்க. (அரங்கேற்று காதை. 106-113)

99

இதில் கூறப்பட்ட “ஒருமுக எழினியும், பொருமுக எழினியும், கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு” என்னும் அடிகளுக்கு அடியார்க்கு நல்லார் இவ்வாறு உரை எழுதுகிறார்.

இடத்தூண் நிலையிடத்தே உருவுதிரையாக ஒருமுக எழினியும், இரண்டு வலத்தூணிடத்தும் உருவு திரையாக பொருமுக எழினியும், மேற்கட்டுத் திரையாகக் கரந்துவரல் எழினியும், செயற்பாட்டாலே வகுத்து என்க. மேற்கட்டுத் திரையாய் நிற்பது ஆகாய சாரிகளாய்த் தோன்றுவார்க்கெனக் கொள்க என்னை?

-அரிதரங்கிற்

செய்தெழினி மூன்றமைத்துச் சித்திரத்தாற் பூதரையும் எய்த எழுதி இயற்று

என்றார் பரத சேனாபதியாரும்

இதனாலே, தமிழர் தமது அரங்க மேடைகளிலே மூன்று வகையான எழினிகளை அமைத்தனர் என்பது தெரிகின்றது.

காவிரிப்பூம் பட்டினத்தில் உபவனம் என்னும் பூந்தோட்டத்திலே புத்தர் பெருமானுக்கு அமைக்கப்பட்ட பளிக்கறை (கண்ணாடி) மண்டபம் இருந்தது. அந்தக் கண்ணாடி மண்டபத்திலே, மணிமேகலை என்பவள், உதயகுமாரன் என்னும் சோழ அரசகுமாரன் தன்னைப் பின்தொடர்ந்து வருவதை அறிந்து, ஒளிந்து கொண்டனள். ஆனால், அரசகுமரன் அவள் பளிக்கறை மண்டபத்திற்குள் இருப்பதைப் பார்த்தான். பார்த்த அவன், அவள் அதற்குள் இருக்கும் இருப்பைக் கண்டு, “கண்ணாடியால் அமைக்கப்பட்ட பொருமுக எழினிக்குள்ளே இலக்குமி, பாவைக் கூத்து ஆடுவது போல ஓவியன் எழுதியமைத்த பதுமையோ" என்று தனக்குள் எண்ணி எண்ணி வியந்தான் வியந்தான் என்று மணிமேகலை என்னும் காவியம் கூறுகிறது.