உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

தமது அரையில் சுற்றிக் கட்டியிருக்கிறார். அப்பாம்பு படமெடுத்து அழகுற ஆடுகிறது.

எட்டுக் கைகள் உள்ளன. வலதுபுறத்துக் கைகளில் கோடரி, துடி, அபய முத்திரை காணப்படுகின்றன. மற்றொரு கை இடதுபுறமாக நீண்டு வீசிய கரமாக (கஜஹஸ்தம்) அமைந்திருக்கிறது. இடதுபுறத்தில் உள்ள நான்கு கைகளில் ஒன்றைத் தூக்கி வியப்புக்குறி (விஸ்மயம்) யுடனும், மற்றொரு கையை வீசிய கரமாக நீட்டி (கஜஹஸ்தமாக உள்ள வலது கைக்கு ஒப்ப) அமைத்தும், இன்னொரு கையைத் தாழ்த்தி, வியப்புக்குறி தோற்று வித்தும், மற்றொரு கையில் எதையோ பிடித்திருப்பது போன்றும் காணப் படுகின்றன. கையில் எதைப் பிடித்திருக்கிறார் என்பது சிற்பத்தில் காட்டப்படவில்லை. இந்தத் தாண்டவத்தில் சிவபெருமான் தமது கையொன்றில் மயிலிறகு பிடித்திருக்கிறார் என்று சாத்திரம் கூறுகிற படியால், இக்கையில் மயிலிறகு இருக்கவேண்டும் என்று துணியலாம்.

முகக்குறிப்பு, உடம்பின் சாய்வு, நடனம் செய்கிற கால்களின் அமைப்பு, அரையில் சுற்றிய படமெடுத்தாடும் பாம்பு, மாலை முதலிய அணிகள், கைகளின் அமைப்பு முதலிய யாவும் இச்சிற்பத்தைப் பெரிதும் அழகுபடுத்துகின்றன. இச்சிற்பத்தில் கலையழகு கனிந்திருக் கிறது. கற்பாறையிலே இவ்வழகான சிற்பத்தை உணர்ச்சி ததும்பச் செதுக்கியமைத்த சிற்பாசாரியினுடைய கைவன்மையும் கலைப் பண்பும் சிறந்து விளங்குகின்றன. இதனைக் காண்பவர் மனம் இதில் நிலைத்து நின்று இதன் அழகில் ஈடுபடுகிறது. இதை அமைத்துக் கொடுத்த சிற்பாசாரியின் பெயர் யாதோ?

என்பர்.

இந்தச் சிற்பம், கி.பி.8ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது

இந்தத் தாண்டவத்தைக் கைலாய மலையிலும், மதுரை வெள்ளி யம்பலத்திலும் சிவபெருமான் நிகழ்த்தியருளினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இதற்குப் 'புஜங்கலளிதம்' என்றும் ‘இன்ப நடனம்' என்றும், பெயர்கள் கூறப்படுவதால், இரண்டுவிதக் காத்தல் செயல்களில் இதனை இன்பக் காத்தல் என அறியலாம். என்னை?

66

நிரைநீர் வளைக்கும் புகழ்நீர்க் கூடல்

வெள்ளியம் பொதுவில் கள்ளவிழ் குழலொடும்

இன்ப நடம் புரியும்'தேவ நாயக!

99