உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது

மறைத்தல் செயலாகிய திரிபுர தாண்டவம்

திரிபுரம் என்றாலும், முப்புரம் என்றாலும் ஒன்றே. திரிபுரமாகிய முப்புரம் என்பது ஆன்மாக்களைப் பற்றிக்கிடக்கிற மும்மலங்களாகும்; புராணங்களில் கூறப்படுகிற மூன்று நகரங்கள் அல்ல. இதனைத் திருமூலநாயனார் நன்கு விளக்குகிறார்:

66

“ அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவன மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யார் அறிவாறே'

என்பது திருமந்திரம்.

ஆன்மாக்களிடத்தில்

படிந்து அவற்றின் தூய்மையை

மறைத்துக் கொண்டிருக்கிற ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும், அரண் அமைந்த கோட்டை போல் எளிதில் அழிக்க முடியாதபடி வலிமை பெற்றிருப்பவையாதலின், அவை முப்புரம் என்று கூறப்பட்டன. ஆன்மாவைப் பற்றிக் கிடக்கும் மும்மலங்களும் அழிந்தால்தான் ஆன்மா வீடுபேறடைய முடியும். ஆன்மாவுக்கு வீடு பேறு அளிப்பதற்காகவே ஐந்தொழிலைச் செய்யும் சிவபெருமான், நான்காவது செயலாகிய திரோபவம் (மறைத்தல்) என்னும் திரிபுர தாண்டவத்தைச் செய்து, மும்மலமாகிய முப்புரத்தை அழித்து, ஆன்மாவுக்கு விடுபேறு அளிக்கிறார்.

உயிரைப் பற்றிக் கிடக்கிற மும்மலங்களை அழிப்பது எப்படி? உயிர், தான் செய்த நல்வினை, தீவினை என்னும் இருவினைகளுக்குத் தக்கபடி பிறந்து இறந்து உழல்கிறது. ஒரு பிறவியில் செய்த வினைப் பயனைத் துய்க்கும்போது புதிய வினைகளையும் செய்கிறது. அந்தப் புதிய வினைகளுக்குத் தக்கபடி மீண்டும் பிறந்து உழல்கின்றது. இவ்வாறு உயிர் பழைய வினைகளைத் துய்த்துக்கொண்டும், புதிய வினைகளைச் செய்து கொண்டும், பிறப்பு, இறப்பு என்னும் ‘சம்சாரத்தில்” உழல்கிறது.