உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

கேழ்வரகு :

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

அரிசிக்கு அடுத்தபடியாக நமது நாட்டில் உண்ணப்படும் தானியம் கேழ்வரகு ஆகும். இதைப் பெரும்பாலும் கிராமவாசிகள் உழைப்பாளிகள் உண்கிறார்கள். கேழ்வரகு உண்பது அனாகரிக மானது என்று உண்மையறியாதவர் தவறாகக் கருதுகிறார்கள். அரிசியைவிடச் சத்துள்ள தானியம் கேழ்வரகு. கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் களியாகவும், பிட்டாகவும், கூழாகவும், அடையாகவும் சமைத்து உண்ணலாம். தசைகளுக்குப் பலந்தருகிற தவிடு கேழ்வரகில் சேர்ந்திருக்கிறபடியால் இது அரிசியைவிட நல்ல பலந்தருகிற உணவாகும். தசைகளுக்கு உரமளிக்கிற தவிடும், உடல் நலத்துக்கு வேண்டிய வெப்பம் அளிக்கிறமாவும் கேழ்வரகில் இருக்கிறபடியால், கேழ்வரகு அரிசியை விடச் சிறந்த உணவு ஆகும். இதனால்தான், கேழ்வரகு உண்பவர் உடல் உரம் பெற்று நன்றாக இருப்பதையும், அரிசி உண்பவர் அவ்வளவு உரம் பெறாமல் இருப்பதையும், கண்கூடாகக் கண்டு வருகிறோம். சிலருக்கு கேழ்வரகு உணவு உடம்புக்கு ஒத்துக்கொள்வதில்லை. இப்படிப்பட்டவர் நெய், பால், தயிர் இவைகளைக் கேழ்வரகுடன் சேர்த்துக் கொண்டால், உடம்புக்கு ஒத்துப் போகும். கேழ்வரகில் கால்ஸியம் இரும்பு என்னும் சத்துக்களும் உள்ளன.

கம்பு :

கேழ்வரகுக்கு அடுத்தபடியாக உள்ள தானியம் கம்பு. அரிசியை விட அதிக சத்துள்ள தானியம் இது. கம்பிலுள்ள தவிடும் எடுபடாமல் அதிலேயே இருப்பதனால், கேழ்வரகைப்போலவே இதுவும் சத்துள்ள உணவு. இதைப் பலகாரமாகச் செய்து உண்கிறார்கள். இதிலிருந்து உடல் நலத்துக்குரிய உயிர்ச்சத்துப் பொருளை உண்டாக்கலாம். அதன் விபரத்தை இந்நூலின் மற்றோர் இடத்தில் கூறுவோம்.

சோளம் :

சோளமும் அரிசியைவிட சத்துள்ள உணவு. இதில், அரிசியை டப் பன்மடங்கு கொழுப்புப் பொருள்கள் உண்டு கோதுமையில் இருப்பதுபோல, சோளத்திலும் பிசு பிசுப்புத்தன்மை இருப்பதனால் கோதுமையை ரொட்டி சுடுவதுபோலச் சோளத்திலும் ரொட்டி சுடலாம். கேழ்வரகு, கம்பு போலவே, சோளமும் சத்துள்ள நல்ல உணவு. தவிடு