உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

டி. விட்டமின்:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

டி. விட்டமின் என்னும் உயிர்ச்சத்து பற்களையும் எலும்பு களையும் பலப்படுத்துகிறது.கால்சியம், பாஸ்பரஸ் முதலிய எலும்பை உண்டாக்கும் பொருள்கள் இரத்தத்தில் நிறைய இருந்தால் மட்டும் எலும்பு உருவடைந்து பலப்படாது. அவற்றோடு இந்த டி.விட்டமின் என்னும் உயிர்ச்சத்து இருந்தால்தான் எலும்பும் பற்களும் உருவடைந்து பலப்பட்டு வளரும். எலும்பு பலமாக இல்லாமற்போனால் உடம்பு பலமாக இராது. வளரும் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும், கருவாய்த்த பெண்களுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் இந்த விட்டமின் மிகவும் தேவை. இந்த விட்டமின் உடம்பில் இல்லாத குழந்தைகள் நேராக நிற்கவும் நடக்கவும் முடியாது. கால் கைகள் வளைந்து குறுகிவிடும். இந்த உயிர்ச்சத்து போதுமான அளவு இருந்தால்தான் உடம்பு சுகமாக இருக்க முடியும். ஆகையால் எலும்புக்கு உரம் அளிக்கிற இந்த உயிர்ச்சத்து எல்லோருக்கும் தேவையானது.

இந்த உயிர்ச்சத்து, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது. சூரிய வெளிச்சம் இல்லாத நாடுகளில் வாழ்பவர்களுக்கு எலும்பு உறுதியாக இராது. சூரிய வெளிச்சம் அதிகமாக உள்ள நாடுகளில் வாழ்பவர் களுக்கு எலும்பு உறுதியாக இருக்கும். நமது நாட்டிலே போதிய சூரிய வெளிச்சம் உண்டு. சூரிய வெளிச்சம் உடம்பின் உள்ளே பாய்ந்து எலும்புகளைப் பலப்படுத்துகிறது. மேலும் உடம்பு முழுதும் எண்ணெய் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கும் பழக்கம் நமது நாட்டில் நெடுங் காலமாக இருந்து வருகிறது. இது நல்ல பழக்கம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதனாலே சூரிய வெளிச்சம் உடம்பில் பாய்ந்து எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது. எப்படியென்றால், எண்ணெயில் சூரிய வெளிச்சம் பாய்வதனால், எலும்புக்கு உரம் அளிக்கிற டி.விட்டமின் உண்டாகிறது. நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று தேரையர் கூறுகிறார். "வீறு சதுர் நாட்கொருகால் நெய் முழுக்கைத் தவிரோம்" என்கிறார்.

இப்படிச் கூறுவதனாலே, எண்ணெயை உடம்பில் தேய்த்துக் கொண்டு வெயிலில் காய்வது நல்லது என்று கருதக்கூடாது. வெயிலில் நின்றால் நரம்புகள் சோர்வடையும். வெயில் வேறு, வெளிச்சம் வேறு என்பதை அறிய வேண்டும்.எண்ணெய் தேய்த்து சூரிய வெளிச்சம் படும்படி நிழலில் இருந்தால் போதும். சிலர், அகலமான கிண்ணத்தில்