உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீ ஸ்ரீஜிநாயநம:

1மயிலாப்பூர் பதிகம் - 1

அறுசீர் அடி ஆசிரிய விருத்தம்

பெருகலர் மாமழை பெய்தொரு சுரர்முகில் பெயர்வது போலிமையோர் அருமலர் தூவிய அலைகடல் மேல்வரு அரிகுல நாயகரூர் கருமலி ஆலய மொடுமணி மாளிகை கடியிதழ் தாதெனவத் திருமலி தாமரை கருமலி பொன்மலி திருமயி லாபுரியே.

1

துருவம ரைவுடல் கொடுசுழல் வோர்தம துணையடி சேரினவர் குருவநன் மாமணி யவைதிசை யேதரு மரிகுல நாயகரூர் அருவநன் மாமணி யொளிகலன் வானவர் அருநர்செய் மாதவருநீள் தெருளெனு மாறுகல் சிவணிமுன் னீர்புணர் திருமயி லாபுரியே.

2

ஒளிதரு தண்ணிழல் குலவியோ ரோசனை யுயரமொ ரோசனையிற் களிதரு நாண்மல ரணியும் சோகுடை யரிகுல நாயகரூர் விளிதரு மூடமும் வினையும் விடாமயல் வீடரு நால்வகையிற் றெளிதரு சாவகர் செழுமனை யேமலி திருமயி லாபுரியே.

3

நிமிரும சோகமு நினைவில சோகமு நெடுமொழி யாகியபோழ்

துமிழ்வள வாடக விடமுன் மேவிய வரிகுல நாயகரூர் இமிழ்திரை வேலையி னிடைமண லாகிய வொளிநீ; அவணுடையும் திமிரம தாமென வெறிதிரை நீர்பெயர் திருமயி லாபுரியே.

4

வரிவளை யார்திரு மருவல ராய்நல மருவிய செல்வமதா யரிவையை மூவுல கலரெழ நேர்புண ரரிகுல நாயகரூர்

விரியுமு னாண்மதி வெயினிலை யாகவா முதல்வெளி யாயுறைய திருவிதை யோகிக ளிருவினை தீர்தருந் திருமயி லாபுரியே.

5