உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

புலைக்குடியிற் பிறப்பதுவும் பொல்லாங்கில் வளர்வதுவு மலைப்புண்டு வருந்துவது மருஞ்சிறையி லகப்படலும் நிலைக்கழுவி லூர்வதுவும் நின்றுறுப்புக் குறைவதுவும் கொலைத்தொழிலால் மடிவித்த கொடுவினையின் பயனாகும். 6

2. பொய் பேசாததன் பயன்

ஐயெனத்தாம் பெருகுதலு மறிவினால் விளங்குதலு மெய்யறங்கேட் டுணர்வதுவு முணர்ந்து பிறர்க் குரைப்பதுவுஞ் செய்தவை நன் றாகுதலுஞ் சிறந்தார் சொற் றேருதலும் பொய்யுரையா நல்விரதம் போற்றியதன் பயனாகும்.

7

கருப்பையின் மூங்கைகளாய்க் கண்டார்கண் டிழிப்பதுவுஞ் சொற்பயிலி னிசைகேளாச் செவிடுகளாய்ச் சுழல்வதுவுஞ் தற்செயலாய்க் கொடுவினைகள் தாம்பலவந் தெய்துதலும் பொய்த்துரைத்துப் பொதியரையின் பொருள்விழைவின் பயனாகும். 8 3. கள்ளாமையின் பயன்

வள்ளல்களாய் வழங்குவதும் வரையறையிற் பெருஞ்செல்வ மெள்ளற்பாடி ன்மையு மினியெனவே நுகர்வதுவும்

தள்ளாத விழுநிதியந் தலைத்தலைவந் தெய்துதலுங் கள்ளாத நல்விரதங் காத்ததன் பயனாகும்.

வளமையிற் சிறுகுடியிற் பிறத்தலும் வருந்திவாழ்ந் திளமைகண் ணூண்காணாத் திரிந்துண்டெய் துழல்வதுவு முளதென்ற பொருள் கெட்டுண் ணீரற்றுழல்வதுவுங் களவின்கட் கன்றியதீக் கடுவினையின் பயனாகும்.

4. பிறன்தாரம் நச்சாமையின் பயன்

மறந்துஞ்சும் நெடுநல்வேல் மன்னர்தம் மகளிரையுஞ் சிறந்துய்ந்த விழுநிதியச் செல்வர்தம் மகளிரையுங் கறங்கியநற் றூரியத்துக் கடிமனையிற் கெழுமுதலும் பிறன்றாரம் நத்தாத பெருவிரதப் பயனாகும்.

10

பேடிகளாய்ப் பிறப்பதுவும் பெண்டீரிற் கடையராய் நாடியுண் டுழல்வதுவும் நலனழிந் தலியராய் பாடியுண்ணுங் கூத்தராய்ப் பலகடையின் முட்டுதலும் பீடின்றிப் பிறன்றாரம் பிழைத்ததன் பயனாகும்.

12

11

9