உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

நடிகை:

சூத்திர:

சூத்திர:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

கூறுகிறேன் கேள். ஆறு பகையை வென்றவர்; பிறருக்கு நன்மை செய்கிற அருள் குணத்தினால் ஐம்பெரும் பூதங்களுக்குச் சமானம் ஆனவர். இவருடைய பெயர் ஸ்ரீமகேந்திர விக்கிரவர்மர் என்பது.

அன்றியும், கற்பாந்த காலத்தின் இறுதியில் உலகம் முதலிய எல்லாப் பொருள்களும் ஆதி புருஷனிடம் ஒடுங்குவது போல, அறிவு, ஈகை, அருள், உயர்வு, ஒளி, கலைவன்மை, வினயம் முதலிய நற்குணங்கள் எல்லாம், இக்கலிகாலத்திலே புகலிடம் கிடைக்காமல் அலைந்து தேடி, கடைசியாக இவரே தமக்குரிய புகலிடம் எனக் கண்டு, இவரிடம் குடிபுகுந்தன. மேலும் உயர்தரமாகிய நகைச்சுவையை உண்டாக்கும் சொற்களாகிய உயர்ந்த இரத்தினங்களும். சிறந்த கவிதைகளும் இவரிடத்திலிருந்து உண்டாகின்றன. இந்தப் புதிய நாடகத்தை உடனே நடிக்க வேண்டும். இனியும் தாமதம் ஏன்?

இசைப் பாட்டுக்கள் தான் என்னுடைய செல்வமும் வாழ்வும். ஆனால், இப்போது இக்கவிஞரின் குணங்களை நினைக்கும் போது என் அடங்குகிறது.

மனம்

(அணியறையிலிருந்து ஒரு குரல்.) அன்பே, தேவ சோமா!

கபால பாத்திரத்தைத் தனது பெரும் புகழாக உடைய அந்தக் காபாலிகன், குடித்து வெறித்துக் களியாட்டம் தெளிந்து அதோ, குமரி ஒருத்தியுடன் வருகிறான். (போகிறார்கள்)

சத்தியசோமன்-சைவ சமயத்தைச் சேர்ந்த ஒரு காபாலிகன். தேவசோமை-சத்திய சோமனுடைய மனைவி

நாகசேனன்-ஒரு பௌத்த பிக்கு

பப்ருகல்பன்-சைவ சமயத்தைச் சேர்ந்த ஒரு பாசுபதன்

பயித்தியக்காரன்