உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

(பிக்கு கூத்தாடுகிறான். காபாலிகனும் அவனுடன் கூத்தாடுகிறான்.) சீச்சீ! வெட்கத்தால் தலை குனிய வேண்டிய இவன் கூத்தாடுகிறான்.

பௌ. பிக்கு:

காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி:

பௌ. பிக்கு:

காபாலி:

தேவ:

போம், ஐயா, போம்! யார் கூத்தாடுகிறது? (நாற்புறமும் பார்த்து) காணாமற்போன என் கபால பாத்திரத்தை மீண்டும் கண்டபோது உண்டான சந்தோஷத்தினால், என்மனம் குதூகலமடைந்து கூத்தாடுகிறது.

நன்றாகக் கண்ணைத் திறந்து இந்தப்பாத்திரத்தைப் பாரும், ஐயா! இதன் நிறத்தையும் பார்.

இதற்கென்ன சொல்லுவது! இந்தப்பாத்திரம் காக்கையைப் போலக் கறுப்பாயிருக்கிறதே.

அசையால், இந்த மண்டை என்னுடையது தான் என்பதை ஒப்புக் கொண்டீர் அல்லவா?

ஆம். நீர் நிறத்தை மாற்றுவதில் கைதேர்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்டேன். இதோ பார். இதோ நீர் போர்த்திருக்கும் சீவா ஆடை, முதலில் தாமரை நூலைப் போல் வெண்மையாக இருந்தது. அதைக் காவி தோய்த்துக் காலைவானத்தின் செந்நிறம் போலச் செய்துவிட்டீர் அல்லவா? அன்றியும், கழுவிப் போக்க முடியாது காஷாயத்தினால் (காவியினால்) அகத்தையும் புறத்தையும் மூடிவைத்திருக்கும் உம்மைச் சேர்ந்த என்னுடைய வெண்மையான கபால பாத்திரம் எவ்வாறு காஷாய நிறத்தை அடையாமல் இருக்கும்?19

ஐயையோ! அநியாயமே! எல்லா லக்ஷணங்களும் பொருந்திய எங்கள் கபால பாத்திரம், பிரம்ம கபாலம் போல திவ்வியமாகவும் வெண்ணிலா போலப் பிரகாசமாகவும், எப்போதும் கள்ளின் மணம் வீசிக் கொண்டும் இருக்குமே. இப்போ, இவனுடைய அழுக்குத் துணியில் படிந்து இந்த மாதிரி, நிறம் மாறிக் கெட்டுப் போய்விட்டதே. இதற்கு நான் என்ன செய்வேன்! (அழுகிறாள்)