உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

காபாலி:

பைத்திய:

பௌ. பிக்கு: காபாலி:

தேவசோ:

பாசு:

காபாலி:

பாசு:

காபாலி:

பௌ. பிக்கு:

59

(மண்டையோட்டை வாங்கிக் கொண்டு) அதோ! அந்தச் சுவற்றிற்குப் பின்னால் அவன் இருக்கிறான். சீக்கிரமாக ஓடிப்போய் அவனைப் பிடித்துக் கொள். அப்படியே ஆகட்டும் (ஓடுகிறான்)

வாதி வெற்றி பெற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன். (மண்டையோட்டை மார்பில் அணைத்துக்கொண்டு) இது வரையில் மகேஸ்வரனைப் பின்பற்றி விரதம் தவறாமல் நடந்து வந்தேன். என் அருமைக் கபால பாத்திரமே! உன்னைப் பிரிந்தபோது மகேஸ்வரனும் என்னை விட்டுப் பிரிந்து விட்டான். உன்னை மறுபடியும் பெற்றபோது, மீண்டும் மகேஸ்வரன் எனக்குக் காட்சியளிக்கிறான்!

ஐயா! உம்மைப் பார்த்தால் பிறைச்சந்திரனோடு கூடிய இரவு2 போலக் காணப்படுகிறீர். இது எனக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

ஐயா, தங்கள் கபால பாத்திரத்தைத் தாங்கள் மீண்டும் பெற்றுக் கொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். நான் அடைந்துள்ள சந்தோஷம் தங்களைச் சேர்ந்தது. (தனக்குள்) குற்றமற்றவனுக்கு அச்சமில்லை என்பது சரிதான். இந்தப் பௌத்த பிக்கு இன்று தப்பித்துக் கொண்டான். (வெளிப்படையாக) என்னுடைய நண்ப ருடைய மகிழ்ச்சியைக் கண்டு நானும் மகிழ்ச்சி யடைகிறேன். தூமவேளை ஆகிவிட்டது. கிழக்குப் பக்கமுள்ள எம்பெருமானிடம்23 செல்லவேண்டும். சச்சரவு கொண்டிருந்த உங்கள் இருவருக்கும் கிராதார் ஜூனர் போல (சிவனும் அர்ச்சுனனும் போல) நட்பும் அன்பும் உண்டாகட்டும். (பாசுபதன் போகிறான்). நாகசேனரே! ஏதேனும் பிழை செய்திருந்தால் மன்னித்தருளும்.

அப்படி ஒன்றும் இல்லை. உம்மை நான் எப்படிச் சந்தோஷப் படுத்துவேன்.