உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.

62

18.

19.

20.

21.

22.

23.

24.

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -19

அனித்தியம், துக்கம், அனாத்மம் என்னும் பௌத்த மதக் கொள்கையை ஈண்டு நூலாசிரியர் பிக்குவின் வாயிலாக ஏளனம் செய்கிறார்.

பௌத்த தர்மத்தைச் சணம் அடைகிறேன் என்பது இதன் பொருள். காஷாயம் என்பது துவர் (காவி) ஆடைக்கும், மனக் குற்றத்திற்கும் பெயர். இந்தச் சொல்லை இவ்விருபொருளிலும் சிலேடையாக வழங்கிறான் காபாலிகன்.

மாயை யுடையவர்கள், அதாவது உலகம் மாயை என்னும் கொள்கை யுடையவர்கள் என்பது பொருள். அன்றியும் புத்தருடைய தாயார் பெயர் மாயாதேவி என்பது இவ்விருபொருளிலும் இச்சொல்லைக் காபாலிகன் வழங்குகிறான்.

தானபாரமிதை என்பது, போதி சத்துவர் புத்தராகப் பிறப்பதற்கு முன்பு செய்த பத்துப் பாரமிதைகளில் ஒன்று. பிக்கு, காபாலிகன் தொந்தரவு பொறுக்க முடியாமல் தன்பாத்திரத்தைக் கொடுத்துவிட, அதை, புத்தர் முன் பிறப்பில் செய்த தானபார மிதைக்கு ஒப்பிட்டுக் கேலிசெய்கிறான் காபாலிகன்.

கருநிறமுள்ள காபாலிகன் மார்பில், வெண்ணிறமுள்ள மண்டை ஓடு பொருந்தியிருப்பதை உபமானப்படுத்திக் கூறுகிறாள்.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குக் கிழக்கில் இருந்த சுடுகாடு. இப்போதும், ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு எதிரில், கிழக்குப்புறமாக திருக்கச்சி மாயானம் என்னும் கோயில் இருக்கிறது.அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில்.

"சவந்தாங்கும் மயானத்துச் சாம்பல் எலும்புத் தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னை பவந்தாங்கும் பாசுபத வேடத்தானை பண்டமார் கொண்டுகந்த வேள்வி எல்லாம்

கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை...”

என்று இவ்விரு கோயில்களையும் குறித்திருக்கிறார். இந்நாடகத்தில் வரும் பாசுபதன் இங்கு இருந்தவனாதல் வேண்டும்.

சத்துருமல்லன் என்பது இந்நூலாசிரியன் சிறப்புப் பெயர்களுள் ஒன்று