உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

73

பாதிக்கப்படுகிறதோ அந்தப் பொருளானது மலம் என்னும் பெயரை யுடையது என்பது பௌஷ்கராகமம்.

1

கடவுள், உயிர், அழுக்கு ஆகிய இம்மூன்றையும் சைவ சமய சாத்திரங்கள் பதி, பசு, பாசம் என்று கூறுகின்றன.

2. ஐஞ்செயல்

உயிர்களிடத்தில் படிந்திருக்கிற அழுக்கை உயிர்கள் தாமே நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையன அல்லவென்றும், கடவுள்தாம் அவ் வழுக்கைப் போக்கி உயிர்களைத் தூய்மைப்படுத்தவேண்டுமென்றும் அறிந்தோம். கடவுள் தமக்கு இயற்கையாயுள்ள பெருங் கருணை யினாலே, உயிர்களிடத்தில் படிந்திருக்கிற அழுக்கைத் துடைத்து அவற்றைத் தூய்மைப்படுத்துகிறார். இந்தச் செயலுக்கு ஐஞ்செயல் அல்லது பஞ்சகிருத்தியம் என்பது பெயர். ஐஞ்செயல்களை அவர் எப்போதும் இடைவிடாமல் செய்து கொண்டேயிருக்கிறார். அவர் இயற்றும் ஐந்து செயல்களாவன: ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. இவற்றைச் சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகம் என்றும் கூறுவர். இவற்றைத் தெளிவாக விளக்குவோம்.

1. ஆக்கல் (சிருட்டி)

ஆக்கல் அல்லது படைத்தல் என்றால், கடவுள் உயிர்களைப் படைக்கிறார் என்பது பொருள் அன்று. கடவுளைப் போலவே உயிர் களும் அனாதியாக உள்ளவை. அவற்றைக் கடவுள் படைக்கவில்லை. அப்படியானால் கடவுள் எதைப் படைக்கிறார்? உயிர்கள் தாம் செய்த வினைப்பயன்களுக்குத் தக்கபடி அவ்வவ் வினைப்பயன்களைப் புசிப்பதற்காக அவ்வுயிர்களுக்கு உடம்பையும், புலன்களையும், வாழ வேண்டிய இடத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களையும் கடவுள் படைத்துக் கொடுக்கிறார். ஆகவே, ஆக்கல் என்பது உயிர்களின் புண்ணிய பாவத்துக்குத் தக்கபடி உடம்பு, அது வாழும் இடம், அது புசிக்கும் பொருள் இவற்றைப் படைத்தல் ஆகும். இவற்றைத் தனு, கரணம், புவனம், போகம் என்று கூறுவர். இதைச் சிவப்பிரகாசம் என்னும் நூலில் சிவப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் இவ்வாறு விளக்கினார்:

66

'தனு என்பது பஞ்சபூதங்களும், அவையிற்றின் காரியங்கள் இருபத்தஞ்சும் கூடின பூததேகத்தை என அறிக. கரணம் என்றது உட் கரணங்கள், புறக்கரணங்கள் என அறிக புவனம் என்பது கன்மம் புசிக்கைக்