உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

95

ஐயத்திற்குத் தெளிவு காணமுடியாமல் நெடுநாள் இடருற்ற பிறகு, கடைசியில் ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?' என்றபடி இதற்கு விடைகாணப் பெற்றேன்!

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் இயற்றிய பஞ்சாதிகார விளக்கம் என்னும் சிறுநூலில் நான் நெடுநாள் அலைந்து தேடிய விடையைக் கண்டேன். அப்பொழுது எனக்குண்டான மகிழ்ச்சியை யானே அறிவேன். அது எத்தகைய மகிழ்ச்சி என்பது ஆராய்ச்சியில் உழன்று. அல்லற்படுவோர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்காது. நன்று. இந்நூலில் கண்ட விடை யாது? ஏழாவது தாண்டவம் என்ன தாண்டவம்? ஐந்தொழில்களில் காத்தல் தொழில் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதுதான் “பஞ்சாதிகார விளக்கத்தில்” கண்ட விடை. அது இது:

66

சடமதனிற் சிருட்டி திதி சங்காரம் நிகழும்;

தரும் உயிரில் திரோபவம் அனுக்கிரகம் தங்கும்; திடமுறும் அத்திதி இரண்டாம் சுகதுன்பம் அருந்தும்;

செய்தியின் அம்முறையால் செய் தொழில் ஆறாம்.

996

உயிர்கள் நல்வினை, தீவினை என்னும் இரண்டுவித கர்மங்களைச் செய்கின்றன. ஆகவே, நல்வினைக்கேற்ப இன்பங்களையும், தீவினைக்கேற்பத் துன்பங்களையும் உயிர் அனுபவிக்க வேண்டும். ஐஞ்செயல்களில் ஒன்றான காத்தல் செயலைச் செய்கிற கடவுள், உயிர்கள் செய்த நல்வினை, தீவினை என்னும் இருவினைகளுக்குத் தக்கபடி இன்பக் காத்தல், துன்பக் காத்தல் என்று இரண்டுவிதக் காத்தல் செயல்களைச் செய்கிறார். எனவே, அவர் செய்யும் ஐந்தொழில் ஆறும், ஐஞ்செயல்களையும் ஒன்றாகச் செய்யும் ஆனந்த தாண்டவம் ஒன்றும் ஆகத் தாண்டவங்கள் ஏழாயின.

நடராச சிற்பங்கள்

ஐஞ்செயல் தாண்டவங்கள் ஏழு என்பதற்கு ஆதாரத்தைத் தேடிக் கண்டோம். இதனோடு நமது வேலை நின்றுவிடவில்லை. இனி, ஏழு தாண்டவங்களுக்கும் ஏழு சிற்ப உருவங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். நல்ல காலம், ஆனந்த தாண்டவம் என்னும் நடராசத் திருவுருவம் எல்லாச் சிவன் கோவில்களிலும் இருக்கின்றது. இது ஐஞ்செயலையும் ஒன்றாகக் காட்டுகிற தாண்டவ உருவம் என்பதை அறிவோம்.