பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
101
பொறைக்கும் (குட்டுவன் இரும்பொறை) வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்று எழுதுகிறார். அதாவது. பெருஞ்சேரலிரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று கருதுகிறார். அவர் இவ்வாறு பட்டியல் எழுதிக் காட்டுகிறார்.[1]
செல்வக் கடுங்கோ வாழியாதன்
↓
பெருஞ்சேரல் இரும்பொறை
(குட்டுவன் இரும்பொறை)
வேண்மாள் அந்துவஞ் செள்ளை (இராணி)
↓
இளஞ்சேரல் இரும்பொறை14
இந்நூலாசிரியரும் இவ்வாறே தவறாகக் கருதியிருக்கிறார்.[2] இது தவறு என்பதை இப்போதறிந்து கொண்டேன்.
டாக்டர். எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் இளஞ்சேரலிரும்பொறையைப் பற்றித் தெளிவாகக் கூறவில்லை. “பெருஞ்சேரல் இரும்பொறையுடன் மாறுகொண்ட இப்பெயர் இவனை அவன் மகனெனக் குறிக்கும் நோக்குடன் ஏற்பட்ட தொடர் என்பது தோன்றும். அதனுடன் உண்மையில் பதிகமே (9ஆம் பத்துப் பதிகம்) அவன் குட்டுவன் இரும்பொறைக்கும் மையூர்கிழான் மகள் அந்துவஞ் செள்ளைக்கும் புதல்வன் என்று கூறுகிறது” என்று எழுதுகிறார்.[3] இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனா, குட்டுவன் இரும்பொறையின் மகனா என்று அவர் திட்டமாகக் கூறாமல் விட்டு விட்டார்.
செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு புதல்வர் இருந்தனர் என்பதை இவர் அறியாதபடியால் இந்தத் தவறு நேர்ந்தது. செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள் என்று அவனைப் பாடிய ஏழாம்பத்துக் கூறுகிறது.
“வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்”(7ஆம் பத்து 10:222)