உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



8. “பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தையாண்ட இளம்பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று, வஞ்சி மூதூர்த் தந்து பிறர்க்குதவி” “அருந்திறல் மரபில் பெருஞ் சதுக்க மர்ந்த, வெந்திறல் பூதரைத் தந்திவண் நிரீஇ, ஆய்ந்த மரபிற் சாந்திவேட்டு” (9ஆம் பத்து -பதிகம்).

9. “சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன். (சிலம்பு, நடுகற் காதை (147–148) சதுக்கப்பூதர் என்பதற்குச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், ‘அமரா பதியிற் பூதங்கள்’ என்று உரை எழுதியுள்ளார். கொங்குநாட்டுக் கருவூருக்கு (வஞ்சிநகர்) பிற்காலத்தில் அமராபதி என்றும் பெயர் வழங்கிற்று. இதைத்தான் அவர் அவ்வாறு எழுதினார்.

10. (மையூர்கீழானைப் பற்றியும் அவன் மகள் அந்துவஞ் செள்ளையைப் பற்றியும் திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பல யூகங்களைக் கூறித் தவறு செய்கிறார். அந்துவனுக்கு(அந்துவன் பொறையனுக்கு) மையூர்கிழான் என்று பெயர் உண்டு என்றும் அந்துவன்பொறையனே அமைச்சனான மையூர்கிழான் என்னும் பெயருடன் இருந்தான் என்றும் இல்லாததைப் புனைந்துரைக்கிறார். P. 506,507, 526. A Comprehensive History of India. Vol. II Edited by K.A. Nilakanta Sastri. 1957.

11. (P. 522,539. A Comprehensive History of India Vol. II 1957. P. 119. A History of South India 1955) சாஸ்திரியைப் போலவே கே.ஜி. சேஷையரும் எழுதியுள்ளார். (P. 52. Cera Kings of the Sangam Period. K.G. Sesha Aiyar 1937.

12. (P. 136. The Chronology of the Early Tamils K.N. Sivaraja Pillai 1932).

13. (P. 44. Cera Kings of the Sangam Period K.G. Sesha Aiyar 1937.

14. (P. 12,13 Introduction, The Silappadikaram English Translation by V.R. Ramchandra Dikshidar 1939).

15. பக்கம் 24. சேரன் செங்குட்டுவன், சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு, மயிலை சீனி. சேங்கடசாமி, Annuals of Oriental Research, University of Madras. (Vol XXI Part I 1966).

16. பக்கம் 121, 122 சேரன் வஞ்சி. திவான்பகதூர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார். (1946).