பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
111
அடிக்குறிப்புகள்
1. ‘1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என்னும் பெயரினால் ஆங்கிலத்தில் முதன் முதலாகத் தமிழ் நாட்டுச் சரித்திரத்தை எழுதியவர் கனகசபைப் பிள்ளையவர்கள். அவர் காலத்தில் சங்க இலக்கியங்கள் அச்சில் வராமல் ஏட்டுச் சுவடிகளாக இருந்தன. ஆகவே சங்க இலக்கியங்களை ஏட்டுச் சுவடியில் படித்து அந்நூலை எழுதினார். அதில் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரன் செங்குட்டுவனுடைய மகன் என்று பிழையாக எழுதினார். அவர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரும் அப்படியே எழுதி விட்டார். அவரைப் பின்பற்றி பானர்ஜி என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஜூனியர் ஹிஸ்டரி. ஆப் இந்தியா’ என்னும் நூலில் 94 ஆம் பக்கத்தில் அதே தவற்றைச்செய்து விட்டார். கே.ஜி. சேஷையர் அவர்கள் யானைக்கட்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறையைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். The last Great cera of the Sangam Period by K.G. Sesha Aiyer, Dr. S.K. Aiyengar Commemoration Volume. P. 217 -221).
2. I.A. XXIX. P, 250 N. 2 P. 49-5). The Colas Vol. I K.A. Nilakanta Sastri (1935). 3. “தண்ணென் பொருறை வெண்மனல் சிதையக் கருங்கைக் கொல்லன் யரஞ்செய் யவ்வாய், நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து, வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவு தொறுங், கடிமரந்தடியும் ஓசை தன்னூர், நெடுமதில் வரைப்பில் கடிமனை இயம்ப, ஆங்கினி திருந்த வேந்தனொடீங்குநின், சிலைத்தார் முரசங் கறங்க, மலைத்தனையென்பது நாணுத்தக வுடைத்தே. (புறம்: 36:5-13) இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு “சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் முற்றியிருந்தானைப் பாடியது” என்று கூறுகிறது.
4. “வேந்து புறங்கொடுத்த வீய்ந்துகு பறந்தலை, மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு, உருமு எறி மலையின் இருநிலஞ்சேர” (புறம்.379:19-21)
5. எழு சமங்கடந்த எழுவுறழ் திணிதோள், கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ, யாங்கன மொழிகோ யானே ஓங்கிய, வரையளந்தறியாப் பொன்படு நெடுங்கோட்டு, இமயஞ் சூட்டிய ஏமவிற்பொறி, மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய, வாடாவஞ்சி நாட்டு நின், பீடுகெழு நோன்றாள் பாடுங்காலே.” (புறம். 39: 11-18) இமயஞ்சூட்டிய ஏமவிற்பொறி சேர அரசரின் முன்னோன் ஒருவன் இமயமலை யுச்சியில் பாறை பொன்றின்மேல் பொறித்து வைத்த வில்லின் அடையாளம். வானவன் – சேர அரசர்பரைக்குப் பொதுப் பெயர். வாடாவஞ்சி - வஞ்சி மாநகரமாகிய கருவூர்.
6. “சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும், வளங்கெழு முசிறியார்ப் பெழ வளைஇ, அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய, நெடுநல் யானை யடுபோர்ச் செழியன்” (அகம். 149: 7-13).
7. “கொய்சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன், முதுநீர் முன்னுறை முசிறி முற்றிக், களிறுபட வெருக்கிய கல்லென் ஞாட்பின் அரும்புண்ணுறுநர்”. (அகம். 57:14-17).
8. P. 83 - 84 The Secret Chamber V.T. Indo Chudan 1969.