உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

233



இந்நோய் தீராதென்று கைவிடப்பட்ட இவர்,நோய் பொறுக்க முடியாத நிலையில், தம் தமக்கையாரான திலகவதியார் இருந்த திரு வதிகை என்னும் ஊருக்குச் சென்று அவரைக் கண்டார். தமக்கையார், சிவபெருமானை வழிபட்டால் சூலைநோய் தீரும் என்று கூற அவ்வாறே இவர் சைவசமயத்தில் சேர்ந்து சிவபெருமானை வழிபட்டார். அப்போது அவருக்கிருந்த சூலைநோய் நீங்கிவிட்டது. அது முதல் இவர் சைவசமயத்தையும் பக்தியியக்கத்தையும் பரவச் செய்வதில் தமது வாழ்நாட்களைக் கழித்தார். தருமசேனர், சமண சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வந்த பின்னர், இவருக்குத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் சூட்டினார்கள். வடமொழியாளர் திருநாவுக்கரசர் என்னும் பெயரை வாகீசர் என்று மொழி பெயர்த்துக் கொண்டார்கள்.

திருநாவுக்கரசர் சைவசமயத்திற்கு வந்து பக்தி இயக்கத்தைப் பிரசாரம் செய்தது, இவரது இளமை கழிந்த முதுமைப் பருவத்திலாகும். இதனை இவர் தமது பாடலகளிலே குறிப்பிட்டீருக்கிறார். இவர் சமணசமயத்தை விட்டுச் சைவசமயத்தில் புகுந்தபோது இவருக்கு வயது ஐம்பத்தைந்து அல்லது அறுபது இருக்கலாம். என்னை?


“ழனபெலாம் இளைய காலம்
ழர்த்தியை நிளையா தேரடிக்
கண்கண இருமி நாளும்
கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பகல் உணங்கல் அட்டும்
பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன்
அதிகைவீ ரட்டனாரே”
(திருவதிகை வீரட்டம், நேரிசை ச.க.)

“பாலனாய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்
மெலிபொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும்
குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித்
திருக்கொண்டீச் சரத்து ளானே”
(திருக்கொண்டீச்சரம். திருநேரிசை. கூ.)