உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. நரசிம்மவர்மன்

அரசியல்

மாமல்லன் என்னும் இயற் பெயரையுடைய நரசிம்மவர்மன் மகேந்திர வர்மனுடைய மகன். இவனை முதலாம் நரசிம்மவர்மன் என்று சரித்திரம் கூறுகிறது. மாமல்லன் நரசிம்மவர்மன், சளுக்கிய அரசரின் தலை நகரமான வாதாபி நகரத்தை வென்று கொண்டபடியினாலே வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்று பெயர்பெற்றான். இவன், பல்வ இராச்சியத்தை கி.பி. 630 முதல் 668 வரையில் அரசாண்டான். இவனுடைய தலைநகரம் காஞ்சிபுரம். வாதாபிகொண்ட நரசிம்மவர்மன், தன் தந்தையாகிய மகேந்திர வர்மன் காலத்தில் மாமல்லன் என்னும் பெயருடன் இளவரசனாக இருந்த போது, கடல்மல்லை என்னும் துறைமுகப்பட்டினத்தில் வாழ்ந்திருந்தான். சோழர்களுக்குக் காவிரிப்பூம்பட்டினமும், பாண்டியருக்குக் கொற்கையும், சேரருக்கு முசிரியும் துறைமுகப்பட்டினமாக இருந்தது போல, பல்லவ அரசர்களுக்குக் கடல்மல்லை துறைமுகப்பட்டினமாக இருந்தது. மாமல்லன் அரசனான பிறகு, இத்துறைமுகப்பட்டினத்துக்குத் தன் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரைச்சூட்டி மாமல்புரம் என்று புதுப்பெயர் கொடுத்தான். இப் பட்டினத்தைப் புத்தம் புதிதாக உண்டாக் கினான் என்று சிலர் கருதுகின்றனர். இது தவறு. இவ்வூர் நீர்ப்பெயற்று என்றும் மல்லை என்றும் கடல்மல்லை என்றும் பண்டைக்காலத்தில் பெயர் பெற்றிருந்தது. இந்தப் பழைய பெயரை மாற்றித் தன் பெயரைச் சூட்டி மாமல்லபுரம் என்று வழங்கினான். மாமல்லபுரம் என்னும் பெயர் பிற்காலத்திலேர மகாபலிபுரம் என்று மருவி வழங்கப்பட்டது. பாமரமக்கள் இப்போது இதனை மாவலிவரம் என்று கூறுகின்றனர்.

மாமல்லன் முடிசூட்டிக் கொண்டபோது நரசிம்மவர்மன் என்னும் பட்டப்பெயரைப் பெற்றா

மாமல்லன் நரசிம்மவர்மன், மாமல்ல புரத்திலே சில குகைக் கோயில்களை அமைத்தான். அன்றியும், “இரதங்கள்” என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற பாறைக் கோயில்களையும் அமைத்தான்.