உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

267


அநுரையைவிட்டுக் காஞ்சிபுரம் போய்விட்டான். ஆகவே, தாட்டோப திஸ்ஸன் பழையபடியே இலங்கையை அரசாண்டான்.

தாட்டோபதிஸ்ஸன் 12 ஆண்டு அரசாண்டு காலமான பிறகு, இளவரசனாயிருந்த அக்கபோதி அரசனானான். இவனை அக்கபோதி நாலாமவன் என்று சரித்திரக்காரர்கள் கூறுவார்கள். இவனுக்கு ஸ்ரீ சங்கபோதி என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

இக்காலத்தில் அநுரையில் தமிழரின் செல்வாக்கு அதிகமாக இருந்ததென்று முன்னமே கூறினோம் அல்லவா? அக்கபோதியின் காலத்தில் தமிழரின் செல்வாக்கு உச்சநிலையில் இருந்தது. பொத்த குட்டன், மகாகந்தகன் என்னும் இரண்டு தமிழ்த் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் அமர்ந்து அதிகாரபலம் பெற்றிருந்தார்கள். தமிழர்களாகிய இவர்கள் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் பொத்தகுட்டன் பெருஞ்செல்வனாகவும் அரசாங்கத்தில் அதிக பலம் உள்ளவனாகவும் இருந்தான். இலங்கையின் மன்னர்களை அரச பதவியிலிருந்து விலக்கவும் நியமிக்கவும் வல்லமையுடையவ னாக இருந்தான். பௌத்தச் சமயத்திற்கு இவன் பல தான தருமங்களைச் செய்தான். மாடம்பிய பரிவேணை என்றும் பௌத்தக் கலா சாலையைக் கட்டி அதற்குப் பல ஊழியர்களைத் தானமாகக் கொடுத்த தோடு தந்தவாயிக சாட்டிகா, நித்தில வெட்டி என்னும் கிராமங்களை யும் நில புலங்களையும் அம்பலவாபி என்னும் ஏரியையும் அந்தச் சாலைக்குத் தானம் செய்தான்.' மேலும், அபயகிரி விகாரையைச் சேர்ந்த கப்பூர பரிவேணையிலும், குருண்டபில்லக விகாரையிலும் மகாராஜகர விகாரையிலும் பாசாடைகளை இவன் கட்டினான். விகாரைகளுக்கு மூன்று கிராமங்களைத் தானம் செய்தான்.

மற்றொரு தமிழத் தலைவனான மகா கந்தகனும் பௌத்த மதத்திற்குத் தான தருமங்களைச் செய்தான். இவன் தன் பெயரினால் கந்தக பரிவேணை என்னும் பௌத்தப் பள்ளியைக் கட்டினான்.

இவ்விரு தமிழர்களை அரசியல் தலைவர்களாகக்கொண்டு இலங்கையை யரசாண்ட அக்கபோதி, பதினாறு ஆண்டு அரசாண்டான். பிறகு இவன் பொலநுவரா என்னும் புலத்திநகரத்தில் காலமானான்.