358
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
நரசிங்கமுனையரையர் காலத்தில், திருமுனைப்பாடி நாட்டில் ஆதிசைவ குடும்பத்தைச் சேர்ந்த சடையைனார்க்கும் அவர் மனைவியார் இசைஞானியார்க்கும் நம்பியாரூரர் மகவாகப் பிறந்தார். அந்தச் சுந்தரக் குழந்தையை நரசிங்க முனையரையர் கண்டு அன்புகொண்டு பெற்றோரின் இசைவு பெற்று அக்குழந் தையைத் தமது மாளிகையில் வளர்த்து வந்தார்.[1] நம்பியாரூரர் என்னும் அக்குழந்தை வளர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் பெயருடன் சைவ சமயகுரவர் நால்வரில் ஒருவராகத் திகழ்ந்தது.
நரசிங்கமுனையரையர் சைவத் தொண்டு செய்து கொண்டிருந்தார். திருவாதிரையில் சிவபெருமானுக்குச் சிறப்புப் செய்து, தம்மிடம் வருகிற சிவனடியார்க்குத் திருவமுது அளித்து அவர்களுக்குத் தனித்தனியே நூறு பொன் கொடுப்பார். ஒரு திருவாதிரையின்போது, நல்லொழுக்கமில்லத தூர்த்தனாகிய ஒருவன், காசு பெறும் பொருட்டு, திருநீறணிந்து அங்கு வந்தார். அந்தத் தூர்த்தனைக்கண்ட மற்றவர்கள் இகழ்ந்து ஒதுங்கினார்கள். அவரைக்கண்ட நரசிங்கமுனையரையர், அவரை இகழாமல், அவர் அணிந்திருந்த நீற்றுக்கு மதிப்புக் கொடுத்து, அவருக்கு இருநூறு பொன் கொடுத்து அனுப்பினார்.
இவ்வாறு சிவபக்தராகத் திகழ்ந்த இந்நாயனார், சைவ அடியார் அறுபத்துமூவரில் ஒருவராகச் சேர்க்கப்பட்டார். இவரால் வளர்க்கப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார், தமது திருத்தொண்டத் தொகைப் பாசுரத்தில்,
என்று இவரைப் போற்றினார். அன்றியும் தமது தேவாரத் திருப்பதிகத்தில்,
“நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்க முனையரையன்
ஆகரித்தீசனுக் காட்செயுமூர் அணிநாவலூர்......”[2]
என்று சிறப்பித்துப் பாடினார்.
கடையனார், இசைஞானியார்
திருமுனைப்பாடி நாட்டிலேயுள்ள திருநாவலூரில் வாழ்ந்திருந்தவர் ஆதிசைவ குலத்தவராகிய சடையனார். இவருடைய மனைவியார் இசைஞானியார். இவருக்கு மகனாகத் தோன்றியவர் நம்பி ஆரூரர்