உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

431


முடியாவிட்டாலும் தென்னிந்தியாவை ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுடன் இணைத்த ஒரு பெருநிலப்பகுதி இருந்திருக்கலாம். அண்மையில் ஜப்பான் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பு இருந்திருப்பதாகச் சில அறிஞர் கூறுகின்றனர். கபாடபுரத்தை வடநாட்டுக் காப்பியங்கள் குறிப்பிடுவதி லிருந்து ஒரு நிலப்பகுதி குமரிக்குத் தெற்கில் இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. 9. ‘வென்வேற் கவுரியர் தொன்முது கோடி' (அகம். 70-13).

10. கொடும்பளூர் இக்காலத்திய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

11, அகம் 13:10

12, பரிபா. 1:1-5, 2:19-21, 13: 27-33, 15: 13-14

13, சிலப். 11: 94-97.

14, இந்நூலின் அடிப்படைச் சான்றுகள் - II, கல்வெட்டு வரிசை எண் 44 முதல் 46 வரை.

15, இந்நூலின் அடிப்படைச் சான்றுகள் -II, கல்வெட்டு வரிசை எண் 1-6.

16. பரிபா. 12: 9-10; கலி, 67: 3-4.

17. சிலப். 11 : 108; பரிபா. 15:21-23.

18. 'அக்காலத்து அவர் நாட்டிற்குத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகி பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதம் - கடல் கொண்டு ஒழிதலால் குமரியாகிய பௌவம் என்றார்'. சிலப். 8: 1-2 அடியார் உரை.

19. சிலப்.14: 108-112

20. அகம் : 220:13.

21.பெரிபுளூஸ் ‘நெல்சிந்தா' என்று குறிப்பிடும் மேற்குக் கடற்கரைத் துறைமுகத்தையும் 'நெல்லினூர்' என்று கொள்ள இடமுண்டு, இதுவும் பாண்டியருக்குச் சொந்தமானது என்று பெரிபுளூஸ் நூல் கூறுகிறது.

22, Kol Kei.

23. Elankon of Ptolemy

24.‘சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. (களவியலுரை)

25,'அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கபாடபுரத்தென்ப, அக்காலத்துப்போலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது.' (களவியலுரை)

26, இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம்.

27. பரிபா. தி. 7: 1-5.