உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. இராவணன் இலங்கை*[1]

தமிழ்நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதிவந்தனர், வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென்இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதிவருகின்றனர் போலும். ‘தென் இலங்கை’ என்பதற்குத் தமிழ்நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென்இலங்கை என்பதற்கு, ‘அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை’ என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ்நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டுவருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம்பெற்றுவிட்டது.

சங்க நூல்கள் கூறுவன

தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். “வென்வேற் கவுரியர் தொன்முதுகோடி, முழங்கிரும் பௌவம் இரங்கு முன்றுறை, வெல்போரிராமன் அருமறைக் கவிந்த பல்வீழ் ஆலம்” (அகநானூறு, 70)

இராமேசுவரத்தைத் தொடர்ந்து இலங்கைத் தீவின் வடபுறம் வரையில் கடலில் காணப்படும் கற்பாறைகளைச் சேது அல்லது அணை என்றும், இவ்வணையை வானரப் படைகள் அமைத்தன என்றும் கதை வழங்கப்படுகிறது. ஆனால், குமரி முனையிலிருந்து இலங்கைக்குக் குரங்குப் படைகள் அணை அமைத்தன என்று


  1. சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) என்ற நூலில் இடம்பெற்ற கட்டுரை.