448
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
வேடர் முதலியவர்களால் மேற் கொள்ளப்பட்டிருந்தது. பிறகு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே பௌத்தமதம் இலங்கைக்கு வந்து அது அரசாங்க மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மெல்ல மெல்ல இலங்கை முழுவதும் பரவிற்று. பௌத்தம் இலங்கையில் அரசாங்க மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு செல்வாக்கடைந்தபோது, அங்கு முன்பு இருந்து வந்த தமிழர் தெய்வ வழிபாடு பின்னிலையடைந்தது. பின்னிலையடைந்ததே தவிர மறைந்து அழிந்து விடவில்லை. பௌத்த மதத்தைச் சார்ந்த சிங்களவர் இன்றுங்கூட மாயோன், சேயோன் முதலிய தமிழ்த் தெய்வங்களை வழிபடுகின்றனர். இதனைச் சற்று விளக்கிக் கூறுவோம்.
முருகன், திருமால், வருணன், இந்திரன் என்னும் பழைய தெய்வங்களைத் தமிழர் வழிபட்டனர். இத்தெய்வங்களில் முருகன், திருமால், வருணன் என்னும் மூன்று தெய்வங்கள் இலங்கையில் முற்காலத்திலும் பிற்காலத்திலும் வழிபடப்பட்டனர். இந்திரன் வணக்கம் இலங்கையில் நடைபெறவில்லை. மற்ற மூன்று தெய்வங்கள் இலங்கையில் தொன்றுதொட்டு, அங்குப் பௌத்த மதம் வருவதற்கு முன்னரேயே, வழிபடப்பட்டனர். இத் தெய்வங்களில் வருணன் வணக்கம், பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது போலவே, இலங்கையிலும் மறைந்து விட்டது. ஆனால் முருகன் வணக்கமும் திருமால் வணக்கமும் தமிழ் நாட்டில் இன்றும் நிகழ்ந்து வருகிறது போலவே இலங்கையிலும் தொன்று தொட்டு இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் வாழ்கிற தமிழர்களால் முருகனும் திருமாலும் வழிபடப்படுகின்றனர் என்பது மட்டும் அல்ல; தமிழரல்லாத பௌத்தராகிய சிங்கள மக்களாலும் முருகனும் திருமாலும் தொன்று தொட்டு இன்றுகாறும் வழிபடப்படுகின்றனர். முருகன் சிங்களவர்களால் ஸ்கந்தன் என்றும் கந்தன் என்றும் வழிபடப்படுகிறார். திருமால், விஷ்ணு என்றும் மாவிஸ் உன்னானே என்றும் சிங்களவர்களால் வழிப்படப்படுகிறார். இவற்றை விளக்கிக் கூறுவோம்.
ஸ்கந்தன் - (முருகன்)
ஸ்கந்தனாகிய முருகனை (இலங்கைத் தமிழர் வழிபடுவது மட்டுமல்லாமல்) சிங்களவரும், இலங்கைக் காட்டில் வாழும் வேடர்களும் வழிபடுகின்றனர். ஸ்கந்தனைக் கெலெதெவியோ (கல்தெய்வம், கல்-மலை, தெவியோ - தெய்வம்) என்றும் கலெ இயக்க (கலெ - மலை, இயக்க சிறுதெய்வம்) என்றும் கூறுகிறார்கள். கந்தன், கடலுக்கப்பா-