உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

454

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



புத்த ஜாதகக் கதைகளிலே, மணிமேகலா தெய்வம் கப்பல் யாத்திரிகருக்கு உதவிசெய்து அவர்களைத் துன்பத்திலிருந்து காத்த செய்திகள் கூறப்படுகின்றன.

பௌத்த மதம் இலங்கையில் பரவுவதற்கு முன்னே, வருணன் வணக்கமும் இலங்கையில் (தமிழ் நாட்டிலிருந்துபோய்) இருந்தது. முருகன், திருமால் வணக்கம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு ஆதிகாலத்தில் சென்று அங்கு வழிபடப்பட்டது போலவே, வருணன் வணக்கமும் தமிழ் நாட்டிலிருந்து சென்று இலங்கையில் வழிபடப் பட்டது.2 தமிழ்நாட்டில் பௌத்மதம் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பரவியது போலவே, தமிழ் நாட்டுக்கு அடுத்துள்ள இலங்கைத் தீவிலும் பௌத்தமதம் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பரவியது. பௌத்த மதத்துடன் மணிமேகலை வழிபாடு இலங்கையில் புகுந்த பிறகு இலங்கையில் வழிபடப்பட்டிருந்த வருணன் வணக்கம் பையப் பைய மறைந்துவிட்டது. ஆனாலும், இலங்கையின் தென்கோடியில் இருந்த துறைமுகப்பட்டினமாகிய தொண்டர பட்டினத்தில் நெடுங்காலமாக வழிபடப்பட்டிருந்த வருணன் வணக்கம் பிற்காலத்திலுங்கூட மிகப் புகழ்பெற்று விளங்கியது. இச்செய்தி பலருக்கு வியப்பாக இருக்கக்கூடும்.

இலங்கையில் பழைமையான துறைமுகப்பட்டினங்களில் தொண்டர பட்டினமும் ஒன்று இது இலங்கையின் தென்கோடியில் இப்போது சிறு கிராமமாக இருக்கிறது. தேவ நுவர (தேவ நகரம்) என்னும் சிங்களப்பெயர் தேவுந்தர என்று திரிந்து வழங்கிற்று. தேவுந்தர என்னும் பெயரை இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர் தொண்டர என்று மாற்றி விட்டார்கள். எனவே, தேவ நுவர என்னும் சொல்லின் ஆங்கிலச் சிதைவு தொண்ட்ர என்பது.

தேவ நுவர இலங்கையின் பழைய பேர் போன துறைமுகப் பட்டினம். இது இலங்கையின் தென்கோடியில் இருந்தது. (இப்போது இலங்கையில் உலகப் புகழ்பெற்று விளங்குகின்ற கொளும்பு துறைமுகப்பட்டினம் மிகச் சமீப காலத்தி ஏற்பட்டது). தேவ நுவரப் பட்டினத்திலே மிகப் பழைய காலத்திலிருந்து வருணனுக்குக் கோவில் இருந்து வந்தது. அந்த வருணன் கோவில் உலகப் புகழ்பெற்றுச் சிறப்புற்றிருந்தது. கடலிலே கப்பல் யாத்திரை செய்தவர்களுக்கு இந்தக் கோவிலின் கோபுரங்களும் கட்டிடங்களும் ஒரு பெரிய நகரம்