460
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
கலிங்க நாட்டில் தங்கி வாணிகம் புரிந்து வந்தனர். எனவே, (கி.மு. 165 + 113) - 278) கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே அத்தமிழ் வாணிகச் சாத்துக்குழு, கலிங்க நாட்டிற் சென்று வாணிகம் செய்யத் தொடங்கிற்று என்பது தெரிகின்றது.
நூற்றுப்பதின் மூன்று ஆண்டுகளாகக் கலிங்க நாட்டிலேயே தங்கி வாணிகம் புரிந்த தமிழர்கள், தங்களுடன் மனைவிமக்களையும் அழைத்துக் கொண்டு போய் இருப்பார்களல்லவா? மனைவி மக்களுடன் வாழாமலா அவர்கள் பரம்பரை பரம்பரையாக அத்தனை ஆண்டுக்காலம் அங்கே தங்யிருப்பார்கள்? எனவே, தரைவழியாக அயல்நாடுகளுக்குச் சென்றபோது, கடைச் சங்ககாலத் தமிழன் தன்னுடன் மனைவியையும் அழைத்துச் சென்றான் என்பது இதனால் பெறப்படுகின்றது.
இதற்கு இன்னொரு சான்றும் கிடைத்திருக்கின்றது. ஆந்திர தேசத்திலே பண்டைக் காலத்தில் புகழ்பெற்றிருந்த அமராவதி நகரத்திலே தமிழ் வணிகர்கள் இருந்தார்கள். அவர்கள் குடும்பத்தோடு அங்குத் தங்கி இருந்தார்கள். அவர்களில் இருவர், பேர்பெற்ற அமராவதி பௌத்த ஸ்தூபிக்குத் திருப்பணிக் கைங்கரியம் செய்திருக்கிறார்கள். இச்செய்தி அங்குக் கிடைத்த சாசன எழுத்துக் கல் எழுத்துக்களினால் தெரிகின்றது.
(பேர்பெற்ற அமராவதி பௌத்தத்தூபி ஏறத்தாழ கி.மு. 200 இல் தொடங்கப்பெற்று கி.பி. 150 அல்லது 200இல் முடிக்கப்பட்டது என்பர். இந்தக் காலம் கடைச்சங்க காலமாக அமைவது ஈண்டுக் கருதத்தக்கது. பிற்காலத்தில், இந்த அமராவதி ஸ்தூபி சிதைந்து அழிந்த பிறகு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுச் சிதையுண்ட கற்களும் சிற்பங்களும் சேகரிக்கப்பட்டுச் சென்னை மாநகரப் பொருட்காட்சி சாலையில் சில கற்களும், இங்கிலாந்தில் லண்டன் மாநகரத்துப் பொருட்காட்சி சாலையில் சில கற்களும் கொண்டு போய் வைக்கப்பட்டுள்ளன.)
அமராவதி பௌத்த ஸ்தூபிக் கட்டடத்திலிருந்து கிடைத்த தூண்கல் ஒன்றில், தமிழன் கண்ணனும் அவன் தம்பி இளங்கண்ணனும் அவன் தங்கை நாகை (நாகம்மாள்) என்பவளும் சேர்ந்து அந்தத் தூண் திருப்பணியைச் செய்ததாக எழுதப்பட்டுள்ளது. இந்தச் சாசனக் கல்லின் அளவு 2 அடி 8 அங்குல அகலமும், 3 அடி 6 அங்குல உயரமும்