உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

484

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


கொன்று உரோகண இராச்சியத்தைக் கைப்பற்றிக்கொண்டதையும் விளக்கிக் கூறுவோம்.

தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பியை மகாநாதன் என்று கூறுவர். அவன் அரச பதவிக்கு வரவேண்டியவனாகையினால் அவனை உபராச மகாநாகன் என்றும் கூறுவர். அவனை அரச பதவிக்கு வராதபடி செய்து தன்னுடைய மகனை (தேவனாம்பிய திஸ்ஸனுடைய மகனை) அரச பதவிக்கு வரச்செய்ய, தேவனாம்பிய திஸ்ஸனுடைய இராணி கருதினாள். ஆகவே, உபராச மகாநாகனைக் கொல்ல அவள் சூழ்ச்சிசெய்தாள். மகாநாகனும் இந்த இராணியின் மகனும் தரச்ச என்னும் ஊரில் தங்கி ஏரி ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தபோது, அநுராதபுரத்திலிருந்து இராணி மாம்பழங்களை மகாநாகனுக்கு அனுப்பினார்கள். அந்தக் கூடையில் உயர்தரமான நல்ல மாம்பழங்களை வைத்திருந்தாள். அவை நஞ்சு இடப்பட்டவை. அவற்றைத் தின்று மகாநாகன் இறந்துபோவான் என்று இராணி கருதினாள். மாம்பழங்களைக் கண்ட இராணியின் மகன் (தேவனாம்பிய திஸ்ஸனின் மகன்), அந்த மாம்பழத்தை எடுத்துத்தின்றான். அது நஞ்சிடப்பட்டிருந்த படியால் அவன் இறந்துபோனான். அவன் இறந்துபோன காரணத்தையறிந்த மகாநாகன், இராணியால் தன்உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று அறிந்து தன்னுடைய குடும்பத்தோடு இராச்சியத்தைவிட்டு அயல் இராச்சியத்துக்குப் போய்விடஎண்ணி, உரோகண நாட்டுக்குச்சென்று அங்கு மச்சராசனின் மகனான காமணி திஸ்ஸனிடம் அடைக்கலம் புகுந்தான். காமணி திஸ்ஸன் அவனுக்குப் புகலிடங்கொடுத்து ஆதரித்தான்.45

உரோகண நாட்டுக்குப் போகிறபோது வழியில் அட்டாலயம் என்னும் கோயிலில் மகாநாகனுடைய மனைவி ஒரு மகனைப்பெற்றாள். அந்தப் பிள்ளைக்கு அவன் பிறந்த இடத்தின் பெயரையும் மகாநாகனுடைய தமயனான திஸ்ஸராசனின் பெயரையும் இணைத்து அட்டாலய திஸ்ஸன் என்று பெயரிட்டான். பிறகு, அவன் உரோகண நாட்டுக்கு வந்து மகாகாம நகரத்தில்தங்கி உரோகண நாட்டை யரசாண்டான் என்று மகாவம்சம் கூறுகிறது (மகாவம்சம் 22 :7-8). இதனைக் கூறுகிற மகாவம்சம், உரோகண நாட்டரசனான காமணி திஸ்ஸன் அடைக்கலங்கொடுத்து ஆதரித்ததையும், காமணி திஸ்ஸன் இறந்தபிறகு அவனுடைய ஆட்சியை மகாநாகன் கைப்பற்றிக்