பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
489
துயரத்தையறிந்து, அதன் கன்று சாவதற்குக் காரணமாக இருந்த தன்னுடைய ஒரே மகனைத் தேர்ச்சக்கரத்தில் மடியும்படிசெய்தான் (மகாவம்சம் 21: 15 - 18). இது திருவாரூரை அரசாண்ட மனுநீதிச்சோழன் வரலாறுபோல இருக்கிறது.
பனைமரத்தின் மேலே கூட்டுக்குள் இருந்த ஒரு குருவிக் குஞ்சை ஒரு பாம்பு பனைமரத்தின்மேல் ஏறி விழுங்கிவிட்டது. அதனைக்கண்ட தாய்க்குருவி அரண்மனைக்கு வந்து ஆராய்ச்சி மணியை அடித்தது. அரசன் வந்து செய்தியறிந்து அந்தப் பாம்பைப் பிடித்துவரச் செய்து, அதன் வயிற்றைக் கீறிக் குஞ்சை வெளியில் எடுத்துவிட்டு, பாம்பை அந்த மரத்தில் தூக்கிக் கட்டித் தண்டித்தான் என்று இன்னொரு கதையை மகாவம்சம் கூறுகிறது (மகாவம்சம் 21 :எ 19-20).
ஏலார மன்னன், புத்த சங்கத்தாராகிய பௌத்தப் பிக்குகளை உணவுகொள்ள அழைப்பதற்காக அவர்கள் இருந்த சேதியமலைக்குச் சென்றான். செல்லும் வழியில் ஒரு பௌத்தத் தூபிக் கட்டடத்தில் அவனுடைய தேரின்அச்சுப்பட்டுச் சில கற்கள் விழுந்தன. அருகிலிருந்த அமைச்சன் கட்டடத்திலிருந்து கற்கள் விழுந்துவிட்டதைத் தெரிவித்தான். அரசன், தேரிலிருந்து இறங்கித் தேர்ச்சக்கரத்தின் அருகே படுத்துக்கொண்டு தன்மேல் தேரைச் செலுத்திக் கொல்லும்படி கூறினான். அமைச்சன், ‘எங்கள் புத்தர் பெருமான் ஒருவருக்கும் தீமை செய்வதைச் சம்மதிக்கமாட்டார். சிதைந்துபோன தூபியைப் பழுது தீர்ப்பதுதான் முறை’ என்று கூறினான். அரசன் அவ்வாறே பழுதுதீர்த்தான். விழுந்துபோன பதினைந்து செங்கற்களுக்கு ஈடாகப் பதினைந்தாயிரம்காப்பணம் (அக்காலத்தில் வழ'கிய ஒரு நாணயம் 9.48 கிராம் எடையுள்ளது) செலவுசெய்து அந்தத் துபியைப் பழுதுதீர்த்தான் (மகாவம்சம் 21 : 21 - 26).
கிழவியொருத்தி வெய்யிலில் உலர வைத்திருந்த அரிசியை மழைபெய்து நனைத்துவிட்டது. அவள் ஆராய்ச்சி மணியை அடித்து முறையிட்டாள். அரசன் பட்டினி நோன்பிருநது தன் குலதெய்வத்திடம் பகலில் மழைபெய்யாமல் இரவில்மழை பெய்விக்கும்படி இந்திரனிடம் கூறும்படி கேட்டுக்கொண்டான். அவ்வாறே பகலில் மழைபெய்து மக்களுக்கு இடுக்கண் நேராமல் இரவில்மழைபெய்து-