பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
491
உரோகண நாட்டில் சிங்கள அரசர்
இங்குத் துட்டகமுனுவுடைய பரம்பரையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பி மகாநாகன் தன்னுடைய உயிருக்கு அஞ்சித் தன்னுடைய குடும்பத்தோடு உரோகண நாட்டுக்குச்சென்று அங்கு அரசாண்டிருந்த பாண்டிய குலத்து அரசனான காமணி அபயனிடம் அடைக்கலம் புகுந்ததையும், காமணி அபயன் அவனுக்குப் புகலிடங்கொடுத்து ஆதரித்ததையும், காமணி அபயன் காலமானபிறகு மகாநாகன் உரோகண நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதையும், மகாநாகனுடைய இளைய மகனான கோதாபயன் உரோகண நாட்டு அரசகுமாரர்கள் (காமணி அபயனுடைய மக்கள்) பதின்மரையும் கொன்று உரோகண நாட்டையே கைப்பற்றிக் கொண்டதையும் முன்னமே அறிந்தோம். பத்து இராச குமாரர்களைக் கொன்று உரோகண நாட்டு ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்ட கோதாபயன், தன்னுடைய மகனான காகவன்ன திஸ்ஸனுக்கு உரோகண நாட்டுப் பாண்டியர் பரம்பரையில் வந்த சவெர என்பளைத் திருமணம் செய்துவைத்து உரோகண நாடு தன்னுடைய பரம்பரைக்கே சேரும்படி செய்துகொண்டான். காகவன்ன திஸ்ஸன் கலியாணி நாட்டு (இலங்கையின் மேற்குப் பக்கத்தில் கொழும்புப் பிரதேத்தைச் சேர்ந்த நாடு) அரசன் மகளான விகாரமகாதேவி என்பவளையும் திருமணஞ்செய்திருந்தான். காகவன்ன திஸ்ஸனுக்கும் விகாரமகாதேவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவன்தான் ஏலேல சிங்கன்மேல் போர்செய்ய வந்த துட்டமகமுனு, அவனுடைய கால்வழியை அடுத்த பக்கத்தில் தருகிறோம்.
காகவன்ன திஸ்ஸன் இறந்தபிறகு துட்டகமுனு ஏலேல அரசன்மேல் போர்செய்யப் பெருஞ்சேனைனையத் திரட்டினான். அவனுடைய தாயான விகாரமகாதேவியும் ஏலேல மன்னன்மேல் போர் செய்யும்படி மகனைத் தூண்டி ஊக்கப்படுத்தினாள். என்னதான் தங்களுக்குச்சேனைப் பலம் இருந்தாலும், குடிமக்கள் ஏலேல அரசனைத் தெய்வம்போலக் கருதியிருந்தபடியால் அவனை நேர்மையாகவும் வீரமாகவும் வெல்ல முடியாது என்று அறிந்து அவர்கள் (விகாரமகாதேவியும் துட்டகமுனுவும்) யோசித்துச் சூழ்ச்சியினால் போரில் வெல்லத் திட்டமிட்டார்கள். திட்டமிட்டபடியே துட்டகமுனு பெரிய சேனையோடு மாவலி கங்கையைக்கடந்து ஏலேல மன்னன்மேல் போர் செய்ய வந்தான். தன்னுடைய சேனையோடு