504
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
இனி, இலங்கையில் அக்காலத்தில் வாழ்ந்த தமிழரைப் பற்றியும், முக்கியமாக அக்காலத்துத் தமிழர் வாணிகத்தைப் பற்றியும் கூறுசூவாம்.
ஆதிகாலத்திலிருந்தே இலங்கைத் தீவில் திராவிட இனத்தவராகிய நாகரும் இயக்கரும் வாழ்ந்திருந்தனர். தமிழரில் ஓரினத்தவராகிய அவர்கள், சங்க காலத்தில் தமிழ்நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களில் காணப்படுகிற குறிப்புகளிலிருந்து அறிகிறோம். இலங்கையிலிருந்த நாகரும் இயக்கரும தமிழைத்தான் பேசினார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அவர்கள் திராவிட மொழியைச் சேர்ந்த ஏதோ ஒரு மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும். பழங்காலத்திலிருந்தே தமிழர், இலங்கைப் பழங்குடி மக்களான நாகருடனும் இயக்கருடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்ததனால் தமிழ்நாட்டிலிருந்து, தமிழ் வாணிகர் அப்பழங்காலத்திலேயே இலங்கைக்குச் சென்று வாணிகஞ் செய்தார்கள். பிறகு கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த விசயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் தமிழகத்திலிருந்து பாண்டிய நாட்டு மகளிரை மணஞ்செய்து கொண்டதை முன்னமே அறிந்தோம். பாண்டி நாட்டிலிருந்து இலங்கைக்குச்சென்ற எழுநூறு மணமகளிரோடு அவர்களைச் சேர்ந்த பரிவாரங்களும, பதினெட்டு வகையான தமிழத் தொழிலாளர் குடும்பங்கள் ஆயிரமும் இலங்கைக்குப் போனார்கள் என்பதையும் அறிந்தோம். அவர்கள் எல்லோரும் தமிழ்மொழி பேசியவர்கள். அதனால், காலப்போக்கில் தமிழ்மொழியும் வட இந்திய மொழியும் சேர்ந்து புதுவைகையான பழைய சிங்கள மொழி (ஈளுமொழி) தோன்றிற்று. இந்தக் கலப்புத் திருமணத்தின் காரணமாகத் தோன்றிய சந்ததியார் சிங்களவர் அல்லது ஈழவர் என்று பெயர்பெற்றனர். சிங்கள மொழியில் பேரளவிற்குத் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளதற்கு இதுவே காரணமாகும். தமிழ் சிங்கள உறவு அந்தப் பழங்காலத்தோடு நின்றுவிட்வில்லை. இடையிடையே அவ்வக் காலங்களில் தமிழகத்திலிருந்து சில தலைவர்கள் தமிழ்ச்சேனையை அழைத்துக்கொண்டுபோய் இலங்கையாட்சியைக் கைப்பற்றிச் சில பல காலம் அரசாண்டதையும் வரலாற்றில் கண்டோம். அந்தத் தமிழர் ஆட்சிக் காலத்தில் தமிழ் வீரர்களும் தமிழ்க் குடும்பங்களும் இலங்கையில் தங்கி வாழ்ந்தனர். அவர்களில் சிலர் சிங்களவர்களாக மாறியிருக்கக்கூடும். இதன்