பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
511
51. சங்க காலத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டு வாணிகர் இலங்கையில் சென்று வாணிகஞ் செய்தது போலவே, அக்காலத்துத் தமிழர் வடக்கே கலிங்க நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்தனர். கலிங்க நகரத்தில் கி.மு. 278ஐ யடுத்த ஆண்டுகளில் அவர்கள் அந்நகரத்தில் தங்கிப் பெரிய வாணிகஞ் செய்தார்கள். அவர்கள் நூற்றிருபது ஆண்டுகளாக அந்தக் கலிங்க நகரத்திலே வாணிகஞ் செய்து செல்வாக்குள்ளவர் ஆனார்கள். அவர்களிடத்தில் சேனை இருந்தபடியால் கலிங்கநாட்டு ஆட்சியையே கைப்பற்றிக் கொள்ளும் அளவு பலம் பெற்றிருந்தார்கள். தமிழ் வாணிகரினால் நேரிடக் கூடிய ஆபத்தைக் கண்டு அஞ்சிய கலிங்கநாட்டரசன் காரவேலன் என்பவன் கி.மு. 165 ஆம் ஆண்டில் (தன்னுடைய 11 ஆவது ஆட்சியாண்டில்) தமிழ் வணிகச் சாத்தரை அழித்து ஒடுக்கினான். இந்தச் செய்தியைக் காரவேலன் கலிங்கநாட்டு ஹத்திகும்பா மலைக்குகையில் எழுதிவைத்துள்ள கல்வெட்டுச் சாசனத்தில் கூறுகிறான்.
52. ஸூரத்திஸ்ஸம் கஹேத்வான தமிளா சேன குட்டகா துவே த்வாஸ வஸ்ஸானி ரஜ்ஜம் தம்மேன காரயும் (தீபவம்சம், 18 : 47). சேனன் குட்டகன் என்னும் தமிழர் சூர திஸ்ஸனை வென்று இருபத்திரண்டு ஆண்டுகள் நீதியாக இராச்சியத்தை அரசாண்டார்கள் என்பது இதன் பொருள்.
53. Anuradhapura Slab Inscriptions of Kutta parinda by S. Pranavatana, Epigraphia zelonica, vol. IV,pt. III, P.15.
54.'பிக்குகளே!தூபிகள் (சேதிமங்கள்)அமைக்கப்படுவதற்குத் தகுதியுள்ளவர் நால்வர். அந்த நால்வர் யாவர்? தாதாகர்என்று சொல்லப்பட்ட அர்ஹந்தராகிய நான்கு உண்மைகளைத் தாமாகவே அறிந்தவராகிய புத்த பகவான், பிரத்தியேக புத்தர், புத்தருடையசீடர்களாகிய அர்ஹந்தர், அரசச் சக்கரவர்த்தி. இந்த நால்வரும் தூபங்கள் அமைக்கப்படுவதற்குத் தகுதியுள்ளவர்கள்' என்று தீகநிகாயம் (மகாபரி நிப்பாண குத்தந்தம் 12ஆம் அதிகாரம்) என்னும் நூல் கூறுகிறது.) என்னும் நூலும் கூறுகிறது. இந்தப் பௌத்த சமய மரபின்படி துட்டகமனு, ஏலேல மன்னனுக்குச் சேதிமம் அமைத்தான். அரசர்கள் போர்க்களத்திலே இறந்து போனால், அவருக்குப் பள்ளிப்படை என்னும் கோயில் அமைப்பது தமிழரின் பழங்கால வழக்கம். ஏலேல மன்னனுக்கு அமைக்கபட்டது, தமிழர் முறைப்படி அமைக்கப்பட்ட பள்ளிப்படை அன்று, பௌத்த மதப்படி அமைக்கப்பட்ட சேதிமக் கட்டடம் ஆகும். ஏலேல மன்னனுக்கு அமைக்கப்பட்ட சேதிமத்துக்கு 'ஏலார படிமக்ககம்' (ஏலாரப் படிமக்கிருகம்) என்று மகாவம்ச டீகா (டீகா - டீகை, உரை) கூறுகிறது. ஏலேல மன்னனை இலங்கை நூல்கள் ஏலாரன் என்று கூறுகின்றன.