உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

எங்குஞ் சூழ்ச்சித் துணைவர்.

பங்கமி லுபாயம் என்கொல்? பகரே.

குடி:

75

வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச்

செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது. அதன்

அந்தமில் பெருவளம் அறியார் யாரே?

மருதமும் நெய்தலும் மயங்கியங் கெங்கும்

7

80

85

புரையரு செல்வம் நிலைபெற வளரும்; மழலைவண் டானம் புலர்மீன் கவர, ஓம்புபு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி புன்னைநுண் தாதாற் பொன்னிறம் பெற்ற எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும் அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும்; கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித் தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த

ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே;

பங்கம்இல் குற்றம் இல்லாத. வஞ்சிநாடு வஞ்சி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட சேரநாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு. செழிப்பான நன்செய் நிலம் உடையது பற்றி நாஞ்சில் நாடு எனப் பெயர் பெற்றுள்ளது. (நாஞ்சில் - ஏர்.) (75 முதல் 144-ஆம் வரி வரையில் நாஞ்சில் நாட்டை நூலாசிரியர் குடிலன் என்னும் நாடக உறுப்பினன் வாயிலாகப் புகழ்ந்து பேசுகிறார்.)

அந்தம் இல் முடிவு இல்லாத மருதம் வயல் சூழ்ந்த இடம். நெய்தல் கடல் சார்ந்த இடம். மயங்கி - கலந்து. வண்டானம் – நாரை. புலர்மீன் - நெய்தல் நில மக்கள் மணலில் உலர்த்தும் மீன். ஓம்புபு - காக்க. நுளைச்சியர் - பரதவ சாதிப் பெண்கள். இருஞ்சிறை நீண்ட சிறகுகளை புலர்த்தும் உலர்த்துகின்ற. அலக்கண் –

துன்பம். கேதகை - தாழை. தாரா - வாத்து.

(வரி 85 - 87) நீரோடையின் கரையில் வளர்ந்த தாழைப் புதரில் பூத்த தாழம்பூவின் நிழல், தண்ணீரில் வாத்தின் உருவம் போலத் தோன்ற, அதுகண்ட தாரா அதனைத் தழுவிற்று. தாராவின் அறியாமையைக் கண்ட ஆம்பல் வாய்திறந்து சிரித்தது. சிரித்தபோது அதன் உள்ளிருந்த பூந்துகள் சிந்தின.