உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

சின்னா ளாகச் சேரனாண் டிடினும்

இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை

150 கொடுத்தது மில்லை, நாம் விடுத்தது மில்லை. பண்டைநம் உரிமைபா ராட்டிட வென்றே கண்டனன் இப்புரி, ஆயினும் அதுஇம் மணத்திற் குதவியாய் வந்தது நன்றே.

ஆதலின் அவன்பால் தூதரை விடுத்துக் 155 கிழமையும் பழமையும் எடுத்துக் கிளத்தில் நாட்டிய நமது நகர்வலி கருதி

மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி வாதமே பலவும் ஓதினும் ஒருவிதம் ஒப்புர வாகா தொழியான் பின்னர், 160 அந்நியோந் நியசமா தானச் சின்னம் ஆகவோர் விவாக மாயின் நன்றெனக் குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின்,

ஜீவ:

குடி:

மறுத்திடா னுடன்மண முடிக்குதும் நன்றே.

8

மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம்

165 இதுவே! குடில! இதனால்

வதுவையும் நடந்ததா மதித்தேம் மனத்தே.

அப்படி யன்றே! செப்பிய உபாயம்

போது மாயினும் ஏகுந் தூதுவர்

திறத்தாற் சித்தி யாகவேண் டியதே.

170 வினைதெரிந் துரைத்தல் பெரிதல, அஃது தனை நன் காற்றலே யாற்றல். அதனால்,

9

வழங்குகிற தமிழ்மொழியே சான்று பகரும் என்னும் கருத்துடையது. தமிழ்நாடாக இருந்த சேர நாட்டில், பிற்காலத்திலே தமிழ்மொழி மலையாள மொழியாக மாறிய பிறகும் நாஞ்சில்நாட்டில் தமிழ் மொழியே வழங்குகிறது.

கண்டனன் – உண்டாக்கினேன். இப் புரி - இந்தக் கோட்டை. கிழமை - உரிமை. கிளத்தில் - சொன்னால். ஓதினும் - சொன்னாலும். ஒப்புரவு - இசைந்து பழகுதல். அந்நியோந்நியம் - நெருங்கிப் பழகுதல். திறத்தால் - திறமையினால். ஆற்றலே - செய்வதே. ஆற்றல் - வல்லமை. -