உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

நாரா:

ஜீவ:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை

280 கோடிய மாந்தர் கோடியின் மேலாம்.

எதற்குந் திருக்குறள் இடத்தரும்! விடுவிடு. விரும்பி யெவருந் தின்னுங்

கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே.

16

(அரசனும் சேவகர்களும் போக)

நாரா:

(தனிமொழி)

ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன், 285 உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான். வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை யுளத்தான்! களங்கம் ஓரான். குடிலனோ

சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான் ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந் 290 தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார். 295 இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர் வடித்து வடித்த மாற்றொலி போன்றே. தடுத்த மெய்ம்மை சாற்றுவர் யாரே? என்னே யரசர் தன்மை! மன்னுயிர்க் காக்கவும் அழிவும் அவர் தங் கடைக்கண் 300 நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம், உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ? கருப்போ தேனோ என்றவர் களிப்பது

நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ?

கோடிய கோணிய, வளைந்த. 279-280 அடி, “எனை வகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகு மாந்தர் பலர்” என்னும் திருக்குறளை உணர்த்துகிறது. 286 அடி, 'வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் தண்ணீர்' என்பது பழமொழி. களங்கம் - குற்றம். ஓரான் - உணர மாட்டான். உன்னுவ - நினைப்பவை. அறைவர் பேசுவர். மாற்றொலி -எதிரொலி. கருப்பு - கரும்பு.