உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய், நின்றது மங்கையர் நிலைமை யென்று நினையா மனிதர், விலங்கினுங் கீழாய் 155 அனையார் தருசிற் றின்பமே யவாவி வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத் தாழ்த்துஞ் சேறா மாற்றுவர். தவத்தால் மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது அந்தோ! தம்மெய் யரிவார் போலத் 160 தனியே தளருந் தமக்குத் துணையாய் வருபவர் தமையும் பகைவராய் நலிந்து பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம் மதிகே டென்னே! துதிபெறு மன்புநற் குணமு முளாரில் துணைவ ராயின் 165 இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர் நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம்

சுக்கான் - கருதிய பக்கமாகக் கப்பலைத் திருப்புவதற்கு ஏற்பட்டுள்ள கருவி.

139-153 வரியின் கருத்து: வாழ்க்கை என்னும் கடலிலே செல்லும் ஆடவருடைய மனமாகிய கப்பல், அது போய்ச் சேரவேண்டிய அறத்துறையை விட்டு அகன்று, ஆசை என்னும் காற்றினால் திசைகளில் சென்று அலையாதபடி குடாக்கடலில் கொண்டுபோய் நிறுத்தும் நங்கூரம்போலவும், ஆடவர் செய்யும் செயல்களில் பொய்யும் வழுவும் மோதுவதனால் ஆசையாகிய திசைகளிலே அலைந்து கெடாதபடி அன்பும் அறமும் ஆன நல்வழியிலே செலுத்திச் சுகமாகிய நல்ல துறைமுகத்திலே சேர்க்கிற சுக்கான் போலவும் இருப்பது, ஆடவரை மணந்த மங்கையரின் நிலைமை என்பது. அனையார்-அப்படிப்பட்டவர். இங்கு மகளிரைக் குறித்தது.

158 - 162 வரியின் கருத்து: தவம் செய்து மந்திரவாளைப் பெற்றவர், அவ் வாளினால் பகைவரைக் கொன்று வெல்லாமல் தம்மைத் தாமே வெட்டிக் கொள்வது போலவும், தமக்குத் துணையாய் வந்தவரைப் பகைவர் என்று கருதி அவரையும் துன்புறுத்துவதுபோலவும் பாலை நஞ்சாக (நல்லதைத் தீயதாகச்) செய்கிறார்கள் இவர்கள் என்பது.

துதி பெறும் – புகழ் பெறும். இல் துணைவராயின் - இல்வாழ்க்கைத் துணைவரானால்.