உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

புரு: பல:

75

புரு:

80

பல:

புரு:

பல:

85

வந்த அலுவலென்?

மன்னவா! நீயாள்

வஞ்சிநா டதற்குத் தென்கீழ் வாய்ந்த

நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே? எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு

பரவு பாடையும் விரவுமா சாரமும்

நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா... நல்லது! சொல்லாய்.

தொல்லையாங் கிழமைபா

ராட்டித் தங்கோல் நாட்டி நடத்த

வல்ல மன்னவ ரின்மையால் வழுதிநாட்டு எல்லையுட் புகுந்தங் கிறுத்துச் சின்னாள் சதியாய் நீயர சாண்டாய்....

அதனால்?

அன்னதன் உரிமை மீட்க உன்னியே

முதுநக ராமெழில் மதுரை துறந்து

நெல்லையைத் தலைநகர் வல்லையில் ஆக்கி ஈண்டினன் ஆங்கே.

புரு:

வேண்டிய தென்னை?

உரையாய் விரைவில்

137

-

வஞ்சி நாடு - சேர நாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு, நன்செய் நாடு என்னும் சொல் நாஞ்சில் நாடு என்று திரிந்ததாக இந் நூலாசிரியர் கருத்துப் போலும்.

பரவும் – பரவியுள்ள, பாடை - பாஷை. விரவும் – கலந்துள்ள. ஆசாரம் – - - - பழக்க வழக்கம். சாக்கியம் - சாட்சி, சான்று. (தமிழ்மொழியும், தமிழர் பழக்க வழக்கமும் உடைய நாஞ்சில் நாடு, (சில ஆண்டுக்கு முன்பு கேரள நாடு தனி நாடாகப் பிரிக்கப்பட்டபோது) இப்போது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.)

75 முதல் 79 வரையில் உள்ள வரிகள், இந் நூலாசிரியர் காலத்தில் நாஞ்சில் நாடு மலையாள தேசத்துடன் சேர்ந்திருந்ததைத் தெரிவிக்கிறது. கிழமை உரிமை. இறுத்து - தங்கியிருந்து. சதியாய் – வஞ்சனை யாய். வல்லை - விரைவு. ஈண்டின் - நெருங்கி வந்தான்.