உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

கருதா துனையிங் கேவிய கைதவன் ஒருவா ரத்திற் குள்ளாய் அவன்முடி 140 யார்பகை இன்மையால் இதுகா றணிந்து பார்வகித் தானெனப் பகரா தறிவன். விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும், அரிக்குநே ரென்னநீ யறைந்த அரசனும் இருப்பரேல் காண்குவம் அவர்வலி யினையும். (சேவகனை நோக்கி)

145 அருள்வர தனையிங் கழையாய்! சேவக!

பல:

(தனதுள்)

சிந்தனை முடிந்தது.

அருள்வரதன்:

புரு:

அருள்:

புரு:

(அருள்வரதன் வர)

வந்தனம்! வந்தனம்!!

நல்லது! செழியன் நெல்லையை நோக்கி நாளையாம் ஏகுவம். நமதுபோர் வீரரவ் வேளையா யத்தமாய் வைப்பாய்.

(பலதேவனை நோக்கி)

ஆஞ்ஞை.

150 செல்லாய் விரைவில். தென்னன் போர்க்கு வல்லா னென்னில் வாரமொன் றிற்குள் துன்னிய சேனையும் தானும்நீ சொன்ன கடிபுரி பலமாக் காக்க. இல்லையேல், முடிநம் அடியில் வைத்து நாமிடும் 155 ஆணைக் கடங்கி யமர்க, எமதிடம் வீணுக் குன்னை விடுத்தகை தவற்கு வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே எஞ்சா தியம்புதி, ஏகாய், ஏகாய்!

(தனதுள்)

(பலதேவன் போக)

முட்டாள் இவனை விட்டவன் குட்டுப்

160 பட்டபோ தன்றிப் பாரான் உண்மை.

பார்வகித்தான் - பூமியை அரசாண்டான். அரிக்குநேர் - சிங்கத்துக்குச் சமமான. அறைந்த - சொல்லிய. ஆஞ்ஞை - ஆணை.